ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுகிறது - THAMILKINGDOM ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுகிறது - THAMILKINGDOM

  • Latest News

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுகிறது


    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான
    தனது கடித்தத்தை பிரிட்டன் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையாக கொடுத்ததன் மூலம் இரண்டுக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது.
    பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவேண்டும்.

    இந்த இரண்டு ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும்? எதுகுறித்தெல்லாம் இருதரப்பும் பேசும்? 44 ஆண்டுகால உறவை இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்குள் முடிக்க முடியுமா?

    பிரித்தானிய மக்களால் மட்டுமல்லாமல் சர்வதேசத்தால் மிகவும் எதிர்ப்பார்க்கபட்டிருந்த பிரக்சிற் நடவடிக்கைக்குரிய உடன்படிக்கையில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கைச்சாத்திட்டுள்ளார்.

    இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான நடவடிக்கை முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    லிஸ்பன் உடன்படிக்கையின் 50 ஆவது சரத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று மாலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்கிடம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பிரி்தானிய நாடாளுமன்றத்தில், பிரதமர் தெரேசா மே வெளியிடவுள்ள அறிக்கையில், 'பிரித்தானியா ஒருங்கிணைந்து செயல்படும் நேரம் தற்போது வந்துள்ளதாக என்று தெரிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து எதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவுக்கும் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான விவகாரத்து செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரித்தானியாவில் கடந்த ஆண்டு யூன் 23 ஆம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பிற்கு அமைய 52 சதவீதமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தனர்.

    இதனையடுத்து பல்வேறு கட்டமாக இடம் பெற்ற பேச்சு வார்த்தைகள் மற்றும் விவாதங்களை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

    முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்






    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுகிறது Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top