Breaking News

விக்கினேஸ்வரனுக்கு எதிராக கறுப்பாடுகள் புகுந்தது எப்படி?-சிறிதரன் விளக்கம்(காணொளி)

விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது
அபகீர்த்தியை ஏற்படுத்தி வடமாகாணசபையின் செயற்பாட்டை முடக்கும் நோக்குடன் செயற்பட்டதாகவே கருதவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விசாரணைக்குழு அறிக்கை பற்றி கருத்து தெரிவித்தபோதே மேற்படி கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர்கள் மீது நடத்தபட்ட விசாரணை முறைமை தவறானது. அமைச்சர்கள் என்ற மதிப்புநிலை மீறப்பட்டு சாதாரணமானவர்களை விசாரிப்பது போல ஆதாரம் இன்றி தமது தனிநபர் நிலைப்பாடுகளை முன்வைத்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

இந்த விசாரணைக்குழுவில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் முன்னர் விவசாய அமைச்சின் செயலாளராக இருந்தபோது அவர்மீதும் ஒன்பது இலட்சம் ரூபா மோசடி தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றது. மற்றய ஒரு அதிகாரி பூநகரி பகுதியில் பல ஏக்கர் காணிகளை மோசடியாக மாற்றியதில் சம்பந்தப்பட்டவர் இன்னொருவர் வடமாகாணசபைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடி வந்தவர். எனவே இதுதொடர்பாக கவனமாக இருக்க வேண்டும்.

முக்கியமாக விக்கினேஸ்வரனுக்கு எதிராக பல கோணங்களில் அழுத்தங்களை கொடுத்துவந்தவர்கள் அதன் ஒருபடிமேலேபோய் அமைச்சர்கள்மீது குற்றம்சாட்டியுள்ளனர் உண்மையாகவே அதிகாரிகள் விட்ட தவறுக்காக அமைச்சர்களை குற்றம் சாட்டுவதைப்போல எதிர்காலத்தில் முதலமைச்சர்கீழுள்ள அமைச்சுகள்மீதும் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் அவரும் பதவியிலிருந்து நீக்கவேண்டும் எனச்சொல்லி அவரை அரங்கிலிருந்து அகற்றுவதே இவர்களின் நோக்கமாகும் எனவும் சிறிதரன் குற்றம் சாட்டினார்.

ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் என்பது தனியே விவசாய அமைச்சரால் முன்னெடுக்கப்பட்ட விடயம் அல்ல. மாகாணசபையில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட ஒரு விடயம் அதிகாரிகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம். அதில் தவறு ஏற்படுமாக இருந்தால் அதற்கு யார் பொறுப்பெடுக்கவேண்டும். அந்த அதிகாரிகள் ஏன் விசாரிக்கப்படவில்லை.


விவசாய அமைச்சர் குறிப்பிடத்தக்க வகையில் நன்றாக செயற்பட்டார். நவம்பர் மாத நினைவுகளை சுமக்கின்ற மரநடுகை மாதத்தை நடைமுறைப்படுத்தினார். சிறந்த உணவகங்களை உருவாக்கும் நோக்கில் அம்மாச்சி உணவகங்களை ஏற்படுத்தினார். கார்த்திகை மலரை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல அவர் முயன்றார். இவற்றை சிலர் பொறாமையுடன் அணுகினார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

அதுபோன்று கல்வி அமைச்சர் ஒரு சில நாட்கள் அந்தப்பாடசாலையில் படித்த வரதன் மாஸ்டர் என அறிக்கை குறிப்பிடுகின்றது. அவர் 3.5 வருடங்கள் அங்கு படித்தவர். அதற்கான பத்திரங்கள் உண்டு. அவரை ஒரு சில நாட்கள் படித்தவர் என சொல்லமுடியும்.

அவரை ஒரு முக்கியமான ஒரு அறிக்கையில் வரதன் மாஸ்ரர் என குறிப்பிடுவது எப்படி பொருத்தமானது.

விசாரணையாளர்களின் தனிப்பட்ட செயற்பாடுகளும் தேர்தல் காலத்தில் சிலருக்கு சார்பாக உரையாற்றிய சம்பவங்களும் உண்டு. அவற்றை வைத்து இவற்றை நாம் அணுகவேண்டியுள்ளது.

அதுபோல தமிழர் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனோகணேசன் வடமாகாணசபை விடயங்களில் கருத்துச்சொல்வதற்கு முன்னர் அதுபற்றிய புரிதலை பெற்றுக்கொள்ளவேண்டும் என விரும்புகின்றேன். உதாரணமாக கல்வி அமைச்சருடன் தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பாக கதைத்திருக்கமுடியும். அவர் அதனை செய்யவில்லை.

குறிப்பாக விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக சுமர்த்தப்பட்டுள்ள நிதிமோசடி தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமர்த்தப்பட்டதோடு அதன் விசாரணை முடிவில் நிதிமோசடி குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சொல்லப்படுகிறது.

அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களை சுமர்த்திய குழு ஒருபடிமேலே போய் இவ்வாறான ஊழல்,மோசடியில் ஈடுபட்ட ஒருவரை மக்கள் தமது மக்கள் பிரதிநிதியாக ஏன் தெரிவு செய்தார்கள் எனக் கேள்வி எழுப்புவதன்மூலம் அவர்களின் திட்டம் அம்பலமாகியுள்ளதையும் இங்கு நோக்கலாம்.






 இதில் மரநடுகை திட்டத்தில் ஊழல் எனச்சொல்லப்பட்டபோதும் அதனை அமைச்சர் கையாண்டாரா என்பதை விசாரணைக்குழு கண்டுபிடிக்கவில்லை.


இலங்கை சட்டப்படி பயிர்களை பயிரிடுவதற்கு  அமைச்சரின் அனுமதி பெறவேண்டியதில்லை எனச்சொல்லும் விசாரணைக்குழு எதற்காக அந்த விவசாயி ஆளுனரிடம் அனுமதிபெற்று விவசாயம் செய்தார் என்பதை விளக்கவில்லை.

 மருதங்கேணி குடிநீர் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் முதலமைச்சரின் பங்கு தொடர்பாக கேள்வி எழுப்பிய விசாரணைக்குழு அந்த கேள்விக்கான பதிலை முதலமைச்சரிடம் பெறுவதற்கு முயற்சிக்கவில்லை.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்