புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை - THAMILKINGDOM புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை - THAMILKINGDOM
 • Latest News

  புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை

  தமிழீழ விடுதலைப்
  புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது.

  இதன்போது, பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top