Breaking News

வித்தியா வழக்கில்!! எதிரிகள் கூறிய பொய்கள் அம்பலம்! (கானொலி)

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கின் எதி­ரி­கள் குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லம், நீதி­வான் மன்­றில் வழ ங்­கிய வாக்­கு­மூ­லம் மற்­றும் தீர்ப்­பா­யத்­தின் குறுக்கு விசா­ரணை ஆகி­ய­வற்­றில் தெரி­விக்­காத விட­யங்­களை தமது சாட்­சி­யத்­தில் தெரி­விப்­ப­தா­னது நடக்­கா­த­வற்றை நடந்­த­தா­கப் பொய் கூறும் செயற்­பா­டா­கும்” என்று பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி.குமா­ர­ரட்­ணம் தீர்ப்­பா­யத்­தி­டம் உறு­தி­யாக எடுத்­து­ரைத்­தார். எதி­ரி­கள் தரப்­புச் சாட்­சி­யங்­கள் தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் நேற்று ஆரம்­ப­மா­கின. முதல் 6 எதி­ரி­க­ளின் சாட்­சி­யங்­கள் நேற்று நிறை­வ­டைந்­தன. 

எதி­ரி­க­ளின் குறுக்கு விசா­ர­ணை­யின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு உறு­தி­யா­கக் கூறி­னார். 

புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நா­தன் வித்­தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கோர­மா­கக் கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் 3 மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அடங்­கிய தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) முன்­னி­லை­யில் இடம்­பெற்று வரு­கி­றது. 

மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் ஆகி­யோர் அடங்­கிய தீர்ப்­பா­யம் நேற்­றுக் காலை 9 மணிக்கு யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற வளா­கத்­தின் 2ஆவது மாடி­யி­லுள்ள திறந்த மன்­றில் கூடி­யது.

வழக்­குத் தொடு­னர் சார்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி. குமா­ர­ரட்­ணம் தலை­மை­யில் அரச சட்­ட­வா­தி­கள் நாக­ரத்­தி­னம் நிஷாந்த், மாதினி விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர். 

எதி­ரி­கள் தரப்­பில் 1ஆம் ,2ஆம் , 3ஆம் , 6ஆம் மற்­றும் 8ஆம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வர்த்­தன மற்­றும் சட்­டத்­த­ரணி லியகே ஆகி­யோ­ரும் 5ஆம் எதி­ரி­யின் சார்­பில் சட்­டத்­த­ரணி ஆறு­மு­கம் ரகு­ப­தி­யும் 4ஆம், 7ஆம் மற்­றும் 9ஆம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யாகி இருந்­த­னர். 

அத்­து­டன் ஒன்று தொடக்­கம் 9 வரை­யான எதி­ரி­கள் சார்­பில் நிய­மிக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி விக்­னேஸ்­வ­ரன் ஜெயந்­தா­வும் முன்­னிலை ஆகி­யி­ருந்­தார். பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் , மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் , சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன் மற்­றும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகிய ஒன்­பது எதி­ரி­க­ளும் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். 

அதனை தொடர்ந்து எதிர்­கள் தரப்­புச் சாட்சி பதி­வு­கள் ஆரம்­ப­மா­கின. எதி­ரி­கள் தரப்பு சாட்­சி­ய­மாக 9ஆம் எதி­ரி­யான சுவிஸ்­கு­மார் என அழைக்­கப்­ப­டும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் என்­ப­வ­ரின் மனைவி மகா­லக்­சுமி சசிக்­கு­மார் மற்­றும் குக­ரூ­பன் என்­போ­ரை­யும் எதி­ரி­கள் தரப்பு சாட்­சி­ய­மாக அழைக்க தீர்ப்­பா­யம் அனு­ம­தி­ய­ளித்­தது. 

முத­லாம் எதி­ரி­யான 

பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார் சாட்­சிக் கூண்­டில் ஏறி சத்­தி­யம் செய்து சாட்­சி­யம் அளிக்கையில்....

“நான் புங்­கு­டு­தீ­வில் 23 வரு­ட­மாக வசிக்­கின்­றேன். கடற்­றொ­ழில் செய்து வரு­கின்­றேன். மாணவி கொலை செய்­யப்­பட்­டது சம்­ப­வம் நடந்த மறு­நாள் 2015ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திக­தியே எனக்­குத் தெரி­யும். நான் அந்த மாண­வியை இரண்டே இரண்டு தடவை தான் நேரில் கண்­டுள்­ளேன். 

என்னை அந்­தப் படு­கொ­லை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர் என ஊர்­கா­வற்­துறை பொலி­ஸார் 14ஆம் திகதி கைது செய்­த­னர். கைது செய்து, என்­னு­டைய சேர்ட்­டைக் கழட்டி கைகளை பின்­பு­ற­மா­கக் கட்டி கீழே தள்ளி வீழ்த்தி என்­னு­டைய கால்­களை கோபி எனும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் மிதித்து இருக்க தோள் பட்­டை­யில் மூன்று நட்­சத்­தி­ரம் உடைய பொலிஸ் உயர் அதி­காரி ஒரு­வர் என்னை கொட்­ட­னால் தாக்­கி­னார்” என கூறி தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் தன்­னைத் தாக்­கிய விதத்தை செய்கை மூலம் செய்து காட்­டி­னார். 

இந்த மாணவி கொலை வழக்­குக்­கும் எனக்­கும் எந்த தொடர்­பும் இல்லை.

இரண்­டாம் எதி­ரி­யான 
பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் சாட்­சி­யம் அளிக்கையில்....

“நான் புங்­கு­டு­தீ­வில் வசிக்­கின்­றேன். கடற்­றொ­ழில் செய்து வரு­கின்­றேன். கடற்­றொ­ழி­லுக்­குச் செல்­லாத சம­யங்­க­ளில் பனை­ம­ரங்­க­ளில் ஏறி மட்டை வெட்­டு­தல் , தென்னை மரங்­க­ளில் ஏறி தேங்­காய் பிடுங்­கு­தல் போன்ற வேலை­களை செய்­வேன். advertisement மாணவி படு­கொலை செய்­யப்­பட்ட மறு­நாள் 2015ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி காலை­யில் நான் வேலைக்கு சென்­று­விட்­டேன் மதி­யம் 1 மணி­ய­ள­வில்­தான் வீட்­டுக்­குச் சென்­றேன். 

அப்­போது எனது மனைவி கூறி­னார் “ பொலிஸ் உங்­களை ஆல­டிக்கு வர சொல்­லிட்டு போறாங்க “ என்று அத­னால் நான் அங்கே சென்­றேன்.

அங்கே சென்­ற­தும் பொலிஸ் என்னை கைது செய்து அழைத்­துச் சென்று எனது முதுக்­குக்­குப் பின் புற­மாக இரண்டு கைக­ளை­யும் சேர்த்து விலங்கு மாட்டி என்னை தடி­ம­னான கொட்­டாங்­க­ளால் அடித்து துன்­பு­றுத்­தி­னார்­கள்.

என்­னி­டம் எந்­த­வி­த­மான வாக்­கு­மூ­லங்­க­ளை­யும் பெறா­மல் சிங்­க­ளத்­தில் எழு­திய தாள் ஒன்­றில் என்­னைக் கையொப்­பம் இடச் சொல்லி அடித்­தார்­கள் அடி­தாங்­கா­மல் அதில் என்ன எழுதி இருக்­கின்­றது என தெரி­யா­மல் அதில் கையொப்­பம் இட்­டேன். 

பின்­னர் என்­னி­டம் குற்ற தடுப்பு புல­னாய்வு பிரி­வி­னர் சிங்­க­ளத்­தில் எழு­திய தாளில் கையொப்­பம் வாங்­கி­னார்­கள். கையொப்­பம் வாங்கி சிறிது நேரத்­தில் தமிழ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் என்­னி­டம் தமி­ழில் எழு­திய வாக்­கு­மூ­லத்­தில் கையொப்­பம் வாங்­கி­னார். ஆனால் அதில் என்னை எழுதி இருக்­கின்­றது என்­ப­தனை வாசித்து காட்­ட­வில்லை. 

என் மீது சுமத்­தப்­பட்டு உள்ள அனைத்­துக் குற்­ற­சாட்­டுக்­க­ளை­யும் நான் முற்­றாக மறுக்­கின்­றேன். எனக்­கும் இந்த குற்­றத்­துக்­கும் எந்த தொடர்­பும் இல்லை” என தீர்ப்­பா­யத்­தில் கூறி­னார். 

அதனை அடுத்து வழக்கு தொடு­னர் தரப்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி இரண்­டாம் எதி­ரி­யி­டம் குறுக்கு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தார். “உத­ய­சூ­ரி­யன் சுரேஷ்­க­ரனை (கண்­கண்ட சாட்சி என சாட்­சி­யம் அளித்­த­வர்) எனக்கு தெரி­யும் ஆனால் பழக்­க­மில்லை. 

அடுத்­த­தாக நட­ராஜா புவ­னேஸ்­வ­ரன் (மாப்­பிள்ளை – கண்­கண்ட சாட்சி என சாட்­சி­யம் அளித்­த­வர்) என்­ப­வரை தெரி­யும். 

இந்த வழக்­கின் 6ஆம் எதி­ரி­யான சிவ­தே­வன் துசாந்த் மாண­வியை ஒரு தலை­யாக காத­லித்­தமை தொடர்­பில் எனக்கு எது­வும் தெரி­யாது. 

மாண­வியை கடத்தி தரு­மாறு துசாந்த் என்­னி­டம் கேட்­ட­தும் இல்லை. அதற்­காக எனக்கு 23 ஆயி­ரம் ரூபாய் பணம் கப்­ப­மா­கத் தர­வும் இல்லை. இந்த வழக்­கில் உள்ள தவக்­கு­மார் , சந்­தி­ர­ஹா­சன் , துசாந்த் ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து நான் மாண­வியை கடத்­த­வும் இல்லை, வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­த­வும் இல்லை, கொலை செய்­ய­வும் இல்லை. 

எனக்­கும் மனைவி பாட­சா­லை­ செல்லும் ம­கள் உண்டு. நான் அவ்­வா­றான செய­லில் ஈடு­பட மாட்­டேன். மாண­வி­யின் படு­கொலை மிக கொடூ­ர­மாக நடந்­துள்­ளது. அதனை இரா­ணு­வத்­தி­னர் செய்­த­தா­கவே முன்­னர் ஊரில் கதைத்­தார்­கள். இது தொடர்­பில் நான் எனது சட்­டத்­த­ர­ணி­யி­டம் கூறி இருந்­தேன். 

ஆனால் வழக்­கின் சாட்­சி­யங்­கள் பதி­யப்­ப­டும் போது அது தொடர்­பில் சட்­டத்­த­ரணி எந்த சாட்­சி­யத்­தி­ட­மும் கேட்­க­வில்லை. இந்த வழக்­கில் சம்­பவ இடத்­தில் என்னை காலை­யில் கண்­ட­தாக சாட்­சி­யம் அளித்த பால­சிங்­கம் என்­ப­வர் எனது மைத்­து­னர். 

நான் அவ­ரின் தங்­கை­யைத்­தான் திரு­ம­ணம் முடித்­துள்­ளேன். அவ­ரும் எனது மனை­வி­யும் ஒரு­நாள் என்னை வவு­னியா சிறைச்­சா­லை­யில் சந்­தித்து தம்மை புல­னாய்­வுத் துறை­யி­னர் மிரட்­டு­வ­தா­க­வும், தமது வாய்க்­குள் கைத்­துப்­பாக்­கியை வைத்து பொய் சாட்சி கூறு­மாறு மிரட்­டு­வ­தாக கூறி­னார்­கள். 

அத­னா­லே­யே­தான் அன்று எனது மச்­சான் எனக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளித்­தார். அது தொடர்­பி­லும் நான் எனது சட்­டத்­த­ர­ணிக்கு கூறி இருந்­தேன். அவர் அது தொடர்­பில் மன்­றில் எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் குறிப்­பி­ட­வில்லை. 

என்­னைப் பொலி­ஸார் தாக்­கி­யது தொடர்­பில் அப்­போ­தைய ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் நீதி­வான் லெனின்­கு­மார் அவர்­க­ளி­டம் கூறி இருந்­தேன். அங்­கும் நான் என் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை” என்று இரண்­டாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார் தெரி­வித்­தார். 

 மூன்­றாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் சாட்சியம் அளிக்கையில்

சாட்­சிக் கூண்­டில் ஏறி சாட்­சி­யம் வழங்­கி­னார். “நான் கடற்­றொ­ழில் செய்து வரு­கி­றேன். 14 ஆம் திகதி காலை 10 மணி­ய­ள­வில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மற்­றும் சில பொலி­ஸார் என்­னைக் கைது செய்­த­னர். 

பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு சென்று ஆடை­களை களைந்து இரண்­டரை மணித்­தி­யா­லங்­க­ளாக அடித்து துன்­பு­றுத்தி சிங்­க­ளத்­தில் எழு­திய தாளில் கையொப்­பம் வாங்­கி­னார்­கள். அதே­போ­லவே புல­னாய்வு துறை­யி­ன­ரும் சிங்­க­ளத்­தில் எழு­திய தாளில் கையொப்­பம் வாங்­கி­னார்­கள். நான் இன்­னும் திரு­ம­ணம் செய்­ய­வில்லை. 

எனக்கு திரு­ம­ணம் பேசி முற்­றாகி இருந்த சம­யத்­தில்­தான் இந்த வழக்­கில் என்­னைக் கைது செய்­த­னர் அத­னால் திரு­ம­ண­மும் நின்று விட்­டது. எனக்கு கள்ளு குடிக்­கும் பழக்­கம் நீண்­ட­கா­ல­மாக இல்லை. கள்ளு சீசன் நேரம் மட்­டுமே குடிப்­பேன். புவ­னேஸ்­வ­ரன் வீட்­டுக்கு கள்­ளுக் குடிக்கப் போவ­தில்லை. மாணவி கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு ஒரு வரு­டத்­துக்கு மேலாக அங்கு போற­தில்லை. 

மாண­வியை கடத்தி 23 ஆயி­ரம் ரூபாய் பணத்தை பெற வேண்­டும் என்ற தேவை எனக்கு இல்லை.மாணவி படு­கொலை செய்­ய­பப்ட்ட தின­மான மே 13ஆம் திகதி நான் எனது சகோ­த­ர­னான இந்­தி­ர­கு­மா­ருக்கு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் வழக்கு ஒன்று இருப்­ப­த­னால், அவரை பஸ்­ஸில் ஏற்­றி­விட காலை 7.30க்கு சைக்­கி­ளில் அவரை அழைத்­துச் சென்­றேன். 

அதனை படு­கொலை செய்­ய­பப்ட்ட மாண­வி­யின் சகோ­த­ரன் உள்­ளிட்­ட­வர்­கள் கண்­டார்­கள். ஆல­டிச் சந்­தி­யில் நின்று காலை 8.20 மணிக்கு அவரை பஸ் ஏற்­றி­விட்­டேன்” என்று மூன்­றாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் தெரி­வித்­தார். 

சகோ­த­ரனை பஸ் ஏற்­றி­விட்ட விட­யத்தை இந்த வழக்­கில் முதன்­மு­றை­யா­கச் சொல்­கி­றீர்­கள். எனவே நடக்­காத விட­யத்தை நடந்­த­தா­கப் பொய் கூறு­கி­றீர்­கள் என்று பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி எதி­ரி­யி­டம் கேள்வி எழுப்­பி­னார். 

“இந்­தத் தக­வல்­களை நான் பொலி­ஸா­ரி­ட­மும் புல­னாய்வு துறை­யி­ன­ரி­ட­மும் தெரி­வித்து உள்­ளேன். எனது சட்­டத்­த­ர­ணி­யி­ட­மும் தெரி­வித்­தி­ருந்­தேன். ஆனால் அவர் அது தொடர்­பில் தீர்ப்­பா­யத்­தி­டம் எது­வுமே தெரி­விக்­க­வில்லை. 

என்னை பொலி­ஸார் அடித்து துன்­பு­றுத்­தல் செய்­தமை தொடர்­பில் , பொலிஸ் உயர் அதி­காரி , சட்ட மருத்­துவ அதி­காரி, புல­னாய்வு துறை­யி­னர் , ஊர்­கா­வற்­றுறை நீதி­வான் மற்­றும் மேல் நீதி­மன்­றில் என 5 இடத்­தில் கூறி­யுள்­ளேன்.

இந்த குற்­றத்­துக்­கும் எனக்­கும் எந்த சம்­பந்­த­மும் இல்லை. இந்­தக் குற்­ற­சாட்­டுக்­களை நான் முற்­றாக மறுக்­கின்­றேன்” 

என்று மூன்­றாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்­கம் தவக்­கு­மார் தெரி­வித்­தார் அதனை தொடர்ந்து 

4ஆம் எதி­ரி­யான மகா­லிங்­கம் சசிந்­தி­ரன் சாட்சியம் அளிக்கையில்.....

சாட்­சிக் கூண்­டில் ஏறி சாட்­சி­யம் வழங்­கி­னார். “நான் தாய்­லாந்­தில் இருந்து ஆடை­களை இறக்­கு­மதி செய்து விற்­பனை செய்­யும் தொழிலை செய்து வரு­கி­றேன். இந்த குற்­றத்­துக்­கும் எனக்­கும் எந்த தொடர்­பும் இல்லை.

முத­லில் மாண­வியை நான் தான் கடத்தி வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்தி படு­கொலை செய்­தேன் என பொலி­ஸார் கூறி­னார்­கள். தற்­போது அந்த அந்த குற்­றத்­துக்கு உடந்­தை­யாக செயற்­பட்­டமை திட்­டம் தீட்டி கொடுத்­தமை என குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­களை நான் முற்­றாக மறுக்­கி­றேன். நான் இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­களை செய்­ய­வில்லை. என் மீது சுமத்­தப்­பட்ட பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளால் எனது அம்மா இறந்­து­விட்­டார். 

எனது வீடு அழிக்­கப்­பட்­டு­விட்­டது. இந்த வழக்­கில் எனக்கு எதி­ராக இது­வ­ரை­யில் எந்­தச் சான்று பொருள்­க­ளும் முன் வைக்­கப்­ப­ட­வில்லை. சாட்­சி­யங்­க­ளும் எனக்கு எதி­ராக இல்லை சாட்­சி­க­ளில் ஒரு­வர் மட்­டும் “மாணவி படு­கொலை செய்­யப்­ப­டு­வ­தற்கு முதல் நாளான மே 12ஆம் திகதி என்னை புங்­கு­டு­தீ­வில் வான் ஒன்­றில் கண்­ட­தா­க­வும், நாங்­கள் வானில் இருந்து மாணவி பஸ்­ஸில் வந்து இறங்கி செல்­வ­த­னைப் பார்த்­த­தா­க­வும் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார். 

ஆனால் நான் குற்ற சம்­ப­வத்­து­டன் தொடர்­புள்­ள­வன் என எவ­ருமே சாட்­சி­ய­ம­ளிக்­க­வில்லை. என்னை 2015ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி புங்­கு­டு­தீ­வில் கண்­ட­தாக சாட்­சிய கூறி­யது பொய். நான் அன்­றைய தினம் கொழும்­பில் தங்­கி­யி­ருந்­தேன். 

அதற்கு நான் உணவு வாங்­கிய யாழ். ஹோட்­டல் சிசி­ரிவி கம­ராப் பதிவு உள்­ளது. அத­னைப் பெறு­வ­தற்கு அந்­தக் ஹோட்­டல் உரி­மை­யா­ள­ரி­டம் கோரி­னோம். ஆனால் கிடைக்­க­வில்லை. 

சாட்­சி­ய­ம­ளிக்க அவரை அழைத்த போதும் அச்­சத்­தால் அவர் வர­மாட்­டேன் என்று கூறி­விட்­டார்” நான்­காம் எதி­ரி­யான என்று சசி­த­ரன் சாட்­சி­ய­ம­ளித்­தார். 12ஆம் திகதி நீங்­கள் கொழும்­பி­லி­ருந்­த­தாக நீதி­வான் நீதி­மன்­றி­டமோ, தீர்ப்­பா­யத்­தில் நடந்த குறுக்கு விசா­ர­ணை­யிலோ தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

எனவே நடக்­காத ஒன்றை நடந்­த­தா­கப் பொய் கூறவே இந்த விட­யத்தை தற்­போது கூறு­கின்­றீர்­கள் என்று பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி எதி­ரி­யி­டம் கேட்­டார். இந்த விட­யத்­தைச் சொல்­வ­தற்கு தற்­போ­து­தான் சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது என்று எதிரி பதி­ல­ளித்­த­தார்.

கடற்­ப­டை­யி­னரேமாண­வி­யைக் கொன்­றது “இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வத்தை கடற்­ப­டை­யி­னரே செய்­த­னர். இந்­தச் சம்­ப­வத்­துக்கு முன்­ப­தாக இரு பெண்­கள் இதே போன்றே படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். அந்­தப் படு­கொ­லை­க­ளுக்கு கடற்­ப­டை­யி­னரே கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் செய்த குற்­றத்தை மறைப்­ப­தற்­கா­கவே எம்­மைக் கைது செய்­து­விட்டு புங்­கு­டு­தீ­வில் ஒலி­பெ­ருக்கி மூலம் அறி­விக்­கப்­பட்­டது” என்­றும் நான்­காம் எதி­ரி­யான சசி­த­ரன் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

ஐந்­தாம் எதி­ரி­யான தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் சாட்­சி­ய­ம­ளிக்கையில்..

“நான் கடற்­றொ­ழில் செய்­ப­வன். இந்­தக் கொலை­யு­டன் எனக்கு எது­வி­தத் தொடர்­பும் இல்லை. இவ்­வாறு ஒரு சம்­ப­வம் நடப்­ப­தைக் கண்­டி­ருந்­தால் அத­னைச் செய்­த­வர்­களை துண்­டம் துண்­ட­மாக வெட்­டிப் போட்­டி­ருப்­பேன்.கொலை நடை­பெற்ற தினத்­தன்று என்னை சம்­பவ இடத்­துக்கு அருகே என்னை சாறத்­து­டன் கண்­ட­தாக பெண்­ணொ­ரு­வர் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தார். அ

வர் பொய் கூறு­கின்­றார். அவ­ருக்­கும் எனக்­கும் இடையே முரண்­பாடு உள்­ளது. அது தொடர்­பில் அவ­ருக்கு எதி­ராக பொலி­ஸில் முறைப்­பாடு செய்­துள்­ளேன். கொலைச் சம்­ப­வம் இடம்­பெ­று­வ­தற்கு முதல் நாள் ஆல­டிப் பகு­தி­யில் என்னை வான் ஒன்­றுக்­குள் கண்­ட­தா­க­வும், அதற்­குள் சுவிஸ்­கு­மா­ரும் இருந்­த­தா­க­வும் சாட்சி ஒரு­வர் கூறி­னார்.

அது­வும் பொய்” என்று 5ஆம் எதி­ரி­யான தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் சாட்­சி­ய­ம­ளித்­தார். மே 12ஆம் திகதி ஆல­டி­யில் வான் ஒன்­றில் உம்­மைக் கண்­ட­தா­கச் சாட்­சி­ய­ம­ளித்­த­வ­ருக்­கும் உமக்­கும் இடை­யே­யும் முரண்­பாடு உண்டா? என தீர்ப்­பா­யம் கேள்­வி­யெ­ழுப்­பி­யது. எதிரி இல்லை எனத் தெரி­வித்­தார்.

ஆறாம் எதி­ரி­யான சிவ­தே­வன் துசாந்த் சாட்­சி­ய­ம­ளிக்கையில் .... 

நான் வேல­ணைப் பிர­தேச சபை­யின் புங்­கு­டு­தீவு உப அலு­வ­ல­கத்­தில் வெளிக்­க­ளத் தொழி­லா­ளி­யா­கப் பணி­யாற்­று­கின்­றேன். நான் வித்­தி­யாவை ஒரு­த­லை­யா­கக் காத­லித்­த­தா­கக் கூறு­வது பொய்­யா­ன விடயம்.

நான் எனது மச்­சா­ளையே காத­லித்­தேன். என்னை இந்த வழக்­கில் கைது செய்­த­தால் அவர் வேறொ­ரு­வ­ரைத் திரு­ம­ணம் செய்­து­விட்­டார். எனது வீட்­டி­லி­ருந்து வித்­தி­யா­வின் மூக்­குக் கண்­ணாடி எடுத்­த­மை­யும் பொய்­யான குற்­றச்­சாட்டு.

அதனை எனக்கு முன்­பா­கவே வைத்­து­விட்டு சிஐ­டி­யி­னர் எடுத்­த­னர். சம்­பவ தினத்­தன்று என்­னால் அது வைக்­கப்­பட்­டி­ருந்­தால் எனது வீட்­டுக்­குத் தீ வைத்த போது அது எரிந்­தி­ருக்­கும்” என்று ஆறாம் எதி­ரி­யான சிவ­தே­வன் துசாந்த் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

“மூக்­குக் கண்­ணாடி மீட்­கப்­பட்ட இடம் எரிந்த நிலை­யில் காணப்­பட்­டமை தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் இடம்­பெற்ற குறுக்கு விசா­ர­ணை­யில் உங்­கள் சட்­டத்­த­ர­ணி­யால் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது அத­னைக் கூறு­வது நடக்­கா­ததை நடந்­த­தா­கக் கூறும் பொய்­யான சாட்­சி­ய­மா­கும்” என்று பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி எதி­ரி­யி­டம் கேள்­வி­யெ­ழுப்­பி­னார்.

சட்­டத்­த­ர­ணி­யி­டம் இது­பற்­றிக் கூறி­யி­ருந்­தேன். ஆனால் அவ­ரால் இந்த விட­யம் கேட்­கப்­ப­ட­வில்லை என்று எதிரி கூறி­னார்.

முதல் ஆறு எதி­ரி­க­ளின் சாட்­சி­யப் பதி­வு­கள் நிறை­வ­டைந்­தன. இன்று 7ஆம் 8ஆம் 9ஆம் எதி­ரி­க­ளின் சாட்­சி­யப் பதி­வு­கள் இடம்­பெ­றும் என தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

28.08.2017 நீதிமன்றில் .....