சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் விசாரணைக்காக அழைப்பாணை! - THAMILKINGDOM சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் விசாரணைக்காக அழைப்பாணை! - THAMILKINGDOM

 • Latest News

  சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் விசாரணைக்காக அழைப்பாணை!

  மன்னார் மாவட்டத்தின் பொது அமை ப்புகளின் ஒன்றியத் தலைவரான வி. எஸ். சிவகரனை, எதிர்வரும் ஒக்டோ பர் மாதம் 2ஆம் திகதி காலை 9.00 மணிக்கு விசாரணைக்காக சமூகமளி க்குமாறு கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக அழைப்பானை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

  மன்னார் – மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து, விகாரை அமைப்பது தானா நல்லாட்சி என, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.  

  இவ்விடயம் தொடர்பாக, திங்கட்கிழமை (25) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியதோடு, இவ் விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கும் செவ்வி வழங்கியுள்ளார். 

  மேலும், எமது நியாயபூர்வமான வேண்டுகைளை எதிர்த்து

  எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த திறப்பு விழா இடம்பெ ற்றால், ஜனநாயக ரீதியில் கறுப்பு கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டம் தொடுப்போமென குறித்த கடிதத்தில் எச்சரித்துள்ளார். 

  இந் நிலையிலேயே, சிவகரனை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 2ஆம் பிரிவில் விசாரணைக்கு சமூகம் தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  சிவகரன் குறிப்பிடுகையில், “விசாரணைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை கடிதம் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினுடாக இன்று (27) பகல்  கிடைத்ததாக” தெரிவித்துள்ளார். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் விசாரணைக்காக அழைப்பாணை! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top