துயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை - THAMILKINGDOM துயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை - THAMILKINGDOM

 • Latest News

  துயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை

  துயிலுமில்லங்களை விவசாயப்  பூ ங்கா வனமாக மாற்றியமைக்க  யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்ட த்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிய கருத்துக்கு வடமாகாண சபையில் எதிர்த்துள்ளனர். 

  வடக்கு மாகாணசபையின் 106ஆவது அமர்வு 28.09.17 இடம்பெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வேண்டுதலை எதிர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  வடமாகாணத்திலுள்ள துயிலுமில்லங்களை ஏன் விவசாயப் பூங்காக்களாக மாற்ற வேண்டும்? இலங்கைச் சட்டத்தின்படி கல்லறை அமைப்பதற்கு அனுமதியுள்ளபடியால், வடமாகாணத்திலுள்ள துயிலுமில்லங்களை புனர மைத்து துயிலுமில்லங்களாகப் பாதுகாக்க வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர்களான அஸ்மின் மற்றும் ஆர்னோல்ட் ஆகியோர் குறிப்பிட்டுள்ள னர்.
  மேலும், நாம் மாவீரர் துயிலுமில்லங்களை முன்பிருந்தபடியே பேணமுடியும் எனத் தெரிவித்துள்ளதுடன், உரிமைக்காக போராடியவர்களுக்கு அதற்கான மரியாதை செலுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: துயிலுமில்லங்களை பூங்கா வனமாக்க சிறிதரன் கோரிக்கை - எதிர்ப்பு வடமாகாண சபை Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top