சாரதி இல்லாமல் நகர்ந்த பேருந்தினால் கிளிநொச்சி கனகபுரத்தில் அதிர்ச்சி! - THAMILKINGDOM சாரதி இல்லாமல் நகர்ந்த பேருந்தினால் கிளிநொச்சி கனகபுரத்தில் அதிர்ச்சி! - THAMILKINGDOM
 • Latest News

  சாரதி இல்லாமல் நகர்ந்த பேருந்தினால் கிளிநொச்சி கனகபுரத்தில் அதிர்ச்சி!

  கிளிநொச்சியில் சாரதி இன்றி பேருந்து நகர்ந்ததாக பரபரப்பு ஏற்பட்டு ள்ளதோடு ஒருவரும் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி மா வட்டத்தில் கனகபுரம் பகுதியில் நேற்றுக் காலை 10.00 மணிக்கு  நடை பெற்றுள்ளது.


  மேலும் தெரிய வருவதாவது, குறித்த பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி  வீதி யின் ஓரமாக நிறுத்திவிட்டு தேனீர் குடிப்பதற்காக இறங்கியுள்ளார். அவர் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்ற இடம் சாய்வுப் பகுதி என குறிப்பிடப்பட்டு ள்ளது.

  இந் நிலையில் குறித்த சாரதி பேருந்தை அவ்விடத்தில் நிறுத்தி விட்டுச் செல்லும் போது கை பிரேக்கை இயக்கத்தில் வைப்பதற்கு மறந்துள்ளார். இத னால் சாய்வுப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட பேருந்து மெதுவாக நகர்ந்து நக ர்ந்து திடீரென  கடை ஒன்றுடன் மோதி நின்றுள்ளது.  

  திடீரென நடந்த இவ் விபத்தினால் கடையில் இருந்த ஒருவர் காயமடை ந்துள்ளார். இது குறித்த விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெ டுத்தவண்ணமுள்ளனர். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சாரதி இல்லாமல் நகர்ந்த பேருந்தினால் கிளிநொச்சி கனகபுரத்தில் அதிர்ச்சி! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top