ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிறுவனங்கள் நீக்கம் - ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை.! - THAMILKINGDOM ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிறுவனங்கள் நீக்கம் - ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை.! - THAMILKINGDOM

 • Latest News

  ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிறுவனங்கள் நீக்கம் - ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை.!

  இலங்கை மத்­திய வங்கி மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்­ளது. அத்துடன் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் அவ் அமை ச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 

  இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் அர­சியல் யாப்பின் 43(1) ஆம் அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக ஜனா­தி­பதி நேற்று வெளி­யிட்ட 2064/26 எனும் அதி விஷேட வர்த்­த­மா­னியின் பிர­காரம் நேற்று முதல் உடன் அமு­லுக்கு வரும் வகையில் மத்­திய வங்கி இவ்­வாறு நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் கீழ் கொண்­டு­  வ­ரப்­பட்­டுள்­ளது. 

  காலா­ கா­ல­மாக நிதி­ய­மைச்சின் கீழேயே மத்­திய வங்கி இருந்து வந்த நிலை யில் கடந்த 2015 ஆட்சி மாற்­றத்தின் பின்னர் மத்­திய வங்­கி­யா­னது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் கீழ் இருந்த தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சின் கீழ் கொண்­டு வ­ரப்­பட்­டது. 

  அது முதல் அந்­நி­லைமை நீடித்த நிலையில், கடந்த 2015 செப்­டம்பர் 21 ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் வெளி­யி­டப்பட்ட 1933/13 ஆம் இலக்க அதி விஷேட வர்த்­த­மா­னியைத் திருத்­தியே நேற்று ஜனா­தி­பதி அதி விஷேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு மத்­திய வங்­கியை நிதி­ய­மைச்சின் கீழ் மீண்டும் கொண்­டு­வந்­துள்ளார். 

  மத்­திய வங்­கி­யா­னது பிர­தமர் ரணிலின் கீழ் இருந்­ததால், மத்­திய வங்­கியில் இடம்­பெற்­ற­ பிணை முறி மோச­டிகள் தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லை­யிலும் பிர­த­ம­ருக்கு சாட்­சி­ய­ம­ளிக்க வேண்டி ஏற்­பட்­டது. 

  அண்­மையில் அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற நிலையில் நேற்று சில அமைச்­சுக்­களின் கீழ் வரும் நிறு­வ­னங்கள் மற்றும் பொறுப்­புக்கள் தொடர்பில் ஜனா­தி­பதி அதி விஷேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டார். அதன் பிர­கா­ரமே மத்­திய வங்கி தற்­போது நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் கீழ் கொன்டுவரப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர செயற்படுவார் எனத் தெரிவிக்க ப்பட்டுள்ளது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிறுவனங்கள் நீக்கம் - ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top