ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழுவின் அவ­ச­ர­ சந்திப்பு இன்று.! - THAMILKINGDOM ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழுவின் அவ­ச­ர­ சந்திப்பு இன்று.! - THAMILKINGDOM

 • Latest News

  ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழுவின் அவ­ச­ர­ சந்திப்பு இன்று.!

  கூட்டு எதிர்க்கட்­சி­யி­னரால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஐக்­கிய தேசிய கட்­சி யின் செயற்­குழு இன்று கூடி ஆராய உள்­ள­தாக அமைச்சர் கயந்த கரு­ணா ­தி­லக தெரி­வித்துள்ளாா்.  

  கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு விட­யங்­க ளும் முக்­கி­யத்­து­வத்­துடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பி ட்டார். அமைச்­ச­ரவை தீர்­மா­னங்கள் அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அர­சாங்க தக வல் திணைக்­க­ளத்தில் நடைபெற் றது. 

  அவ்வேளை  அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக மேற்­கண்­ட­வாறு மேலும் தெரிவிக்கையில்.......,

  ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூடி பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆராய்ந்­துள்­ளது. இதன் போது கட்சி என்ற வகை யில் அதனை தோல்­வி­ய­டைய செய்­வ­தற்கு அனை­வரும் ஒன்­றி­ணை­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர். 

  இன்று கட்­சியின் செயற்­குழு கூடி நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஆரா ய்ந்து எவ்­வா­றா­யினும் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். 

  தலை­மைத்­துவ விடயம் மாத்­திரம் அல்ல ஏனைய பதவி நிலைகள் மற்றும் அவற்றின் அதி­கா­ரங்கள் குறித்தும் பரந்­த­ளவில் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எதிர்­கொள்ள வேண்­டி­ய நிலைமையில் உள்ளோம். 

  அதன்பின் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும். ஆனால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை விவ­கா­ரத்­திற்கு முன்னுரிமை கொடு த்து அனைத்து உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். கட்சிக்குள் இருந்து கொண்டு எதிராக செயற்படுபவர்கள் குறித்து கவனத்தில் எடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழுவின் அவ­ச­ர­ சந்திப்பு இன்று.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top