அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா். - THAMILKINGDOM அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா். - THAMILKINGDOM

 • Latest News

  அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா்.

  உண்­மை­யா­கவே அதி­கார பர­வ­லாக்கம் உள்­ளது என்றால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்கி திட்டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று ஊட­கத்­துறை மற்றும் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­விடம் எடுத்துக் கூறி­யுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்துள்ளாா். 

  யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் மத்­திய வங்கி ஆளு நர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி ஆகி­யோ­ரு­ட­னான கலந்­து­ரை­யாடல் யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் உள்ள விடு­தியில் நடை­பெற்­ற ­பின்னர் வட­மா­காண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வழங்கியபோதே இவ்வாறு வழங்கியுள்ளாா். 

   மேலும் தெரி­விக்­கையில், 

  2018 ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­லவுத் திட்­டத்தின் ஒதுக்­கீட்டின் கீழ் 1000 மில்­லி­ய­னுக்­கான செயற்­றிட்­டத்தை விளக்­கவும், எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பாக தெளிவு படுத்­தவும், அறிந்­து­கொள்­ளவும் நிதி அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் வருகை தந்­தி­ருந்­தனர். 

  குறித்த திட்­டத்தில் எங்­க­ளையும் பங்­கு­தா­ரர்­க­ளாக சேர்க்க வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தேன். மேலும் மத்­திய வங்­கி­யினால் மக்­க­ளுக்கு செய்த நன்­மைகள் தொடர்­பாக தெரிவித்தாா். 

  குறிப்­பாக வங்­கி­யி­லி­ருந்து 50 ஆயிரம் ரூபா­வுக்குள் கடன் பெற்­றி­ருந்தால் அதனை 6 மாதத்­திற்குப் பின்­னரே முதல் மற்றும் வட்­டியை கட்­ட­மு­டியும் என்ற சட்டம் வந்­துள்­ள­தாக தெரி­வித்தார். அந்தச் சட்­டத்தின் பிர­காரம் 6 மாதத்­திற்கு பின்பே தமது வரு­மா­னத்தை அதி­க­ரித்த பின் செலுத்தக் கூடி­ய­தாக அந்தச் சட்­டத்தை உரு­வாக்­கி­யுள்­ளார்கள். 

  இது­போல பல திட்­டங்கள் மத்­திய வங்­கி­யினால் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் அத்­த­கைய திட்­டங்­களை மக்­க­ளுக்கு அறி­விக்­கு­மாறும் நிதி அமை ச்சர் கூறி­யி­ருந்தார். இதன் போது நான் எந்­த­வொரு செயல்­திட்­டங்­க­ளையும் தயா­ரிக்­கும்­போது எங்­க­ளு­டைய உள்­ளீட்­டையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும். 

  குறிப்­பாக மத்­திய அர­சாங்கம் செயல்­திட்­டங்­களை தயா­ரித்­து­விட்டு நாங்கள் இவ்­வாறு செய்­கிறோம் அதனை ஏற்­றுக்­கொள்­ளுங்கள் என்று கூறு­வது பிழை என்று கூறி­யுள்ளேன். மேலும் உண்­மை­யி­லேயே அதி­கார பர­வ­லாக்கம் இருப்­ப­தாக ஏற்­றுக்­கொண்டால் எங்­க­ளையும் பங்­கு­தா­ரர்­க­ளாக ஏற்று அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், தயா­ரிக்க வேண்டும். 

  அதன் பின்னர் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இதனை அமைச்சர் கொள்கை அளவில் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அமைச்சர் அதி­கார பர­வ­லாக்­கத்­திற்கு தன்­னு­டைய முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கி­வ­ரு­பவர் என்­பதால் அதனை ஏற்­றுக்­கொண்டார். 

  மேலும் மகா­வலி அதி­கா­ர­ச­பையின் அதி­கா­ரங்கள் முழு நாட்­டிற்கும் பர­வி­யுள்­ளதால் 1987ஆம் ஆண்டில் இல் கொண்­டு­வ­ரப்­பட்ட அதி­கார பர­வ­லாக்கம் குறித்த கருத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதன் கார­ணத்­தினால் தான்­தோன்­றித்­த­ன­மாக மகா­வலி அதி­கா­ர­சபை தனக்­கேற்­ற­துபோல் செயற்­பட்டு வரு­கின்­றது. 

  இதனை நிறுத்த வேண்டும் ஏன் என்றால் மகா­வலி அதி­கார சபை அதி­கா­ர ங்கள் மீளப்­பெற்று அதற்குப் பதி­லாக வேறு அதி­காரம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு தரப்பட்ட உரித்துக்களை எடுத்து அரசாங்க அதிபருக்கும், கிராமசேவையாளர்களுக்கும் கொடுத்து எங்க ளுடைய அதிகாரங்களை குறைத்துள்ளது. 

  இவற்றை குறைக்காது அதனை மீளப்பெறப்படல் வேண்டும். 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் முழு அதிகாரமும் எங்கள் கைவசம் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தேன் எனத் தெரிவித்துள்ளாா். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா். Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top