பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் இதுவே.! - THAMILKINGDOM பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் இதுவே.! - THAMILKINGDOM

 • Latest News

  பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் இதுவே.!

  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இலத்திர னியல் வாக்கெடுப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பினை நட த்த பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கான விவாத நேர ஒதுக்கீடும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதி ராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பி க்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று காலை சபா நாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் அலுவ லகத்தில் கட்சித்தலைவர்களின் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

  சபாநாயகர் தலைமையில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, ஐக்கிய தேசி யக் கட்சியின் சார்பில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கூட்டு எதிர்க்கட்சி சார்பில் தினேஷ் குண வர்த்தன, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அனுரகுமார திசாநாயக ஆகியோர் பங்கேற்றுள்ளனா். 

  இக் கூட்டத்தின் போது வாக்களிக்கும் முறைமையில் இலத்திரனியல் வாக்க ளிப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பாக நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில்....., 

  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த பாராளுமன்ற விவாதம் 4ஆம் திகதி இடம்பெற்றவுள்ளது. இந்த விவாத தினத்தின் நேர ஒதுக்கீடுகள் குறித்தே பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கூட்டு எதி ர்க்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளு க்கான நேர ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்பட்டது. 

  அன்றைய தினம் காலை 9 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும், வாய்மூல வினாக்கான விடைக்கான நேரம் முடிவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பிக்கப்படும். மதிய நேர இடைவேளை வழங்கப்படாது. தொடர்ந்தும் இரவு 9 மணி வரையில் விவாதம் தொடரும். பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்படும் என தெரிவித்துள்ளாா்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் இதுவே.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top