தந்தையை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சுதாகரனின் பிள்ளைகள்! - THAMILKINGDOM தந்தையை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சுதாகரனின் பிள்ளைகள்! - THAMILKINGDOM

 • Latest News

  தந்தையை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சுதாகரனின் பிள்ளைகள்!

  கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை வேண்டி அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரடியாகச் சந்தித்து தந்தையின் விடுதலைக்காக இரத்து வேண்டியுள்ளனா். 

  ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்காக ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இரு வரும் உறவினர்களுடன் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு க்கு விஜயமாகியுள்ளனா்.

  பிள்ளைகள் இருவரும் ஜனாதிபதி செயலகத்திற்கு ஜனாதிபதியை சந்தி த்து கலந்துரையாடிய போது தங்களது தந்தையை விடுதலை செய்யுமாறு உரு க்கத்துடன் கடிதம் எழுதியிருந்ததை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய பிள்ளை கள் இருவரும், மற்றொரு கோரிக்கை மடல் ஒன்றையும், மகஜர் ஒன்றையும் ஜனாதிபதியிடம் சமா்ப்பித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் இச் சந்திப்பு விடயத்தை தகவல்களாக ஊடகங்களுக்கு அறிவிப்ப தற்கான சந்தர்ப்பம் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுக்கு வழங்கப்படவில்லை என மற்றொரு தகவல் இணையம் தெரிவித்துள்ளது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தந்தையை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சுதாகரனின் பிள்ளைகள்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top