மஹிந்­த­வுடன் இணை­யவும் சம்மதம்.! - THAMILKINGDOM மஹிந்­த­வுடன் இணை­யவும் சம்மதம்.! - THAMILKINGDOM
 • Latest News

  மஹிந்­த­வுடன் இணை­யவும் சம்மதம்.!

  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்க நாம் இட­ம­ளிக்கத் தயா­ராக உள்ளோம். தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வெளி­யேறி எதிர்­க்கட்­சி­யாக செயற்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பினர் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்துள்ளாா்.  

  மத்­திய குழுவில் எம்மை நிரா­க­ரித் தால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணை ­யவும் தயார் என அவர் குறிப்­பிட்டார். ஜனா­தி­பதி சர்­வ­தேச விஜ­யத்தை முடி த்­துக்­கொண்டு நாடு திரும்­பி­யுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி யின் செயற்­பா­டுகள் குறித்து வின­விய போதே இவ்வாறு தெரிவித்து ள்ளாா். 

  இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில்....,

  தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெளி­யேற வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அல்­லது நாம் வெளி­யேறி எதி­ர­ணியில் அம­ர­வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கையும் நகர்­வு­களும் எமக்கு பொருந்­தக்­கூ­டிய ஒன்­றல்ல. ஆகவே எம்மால் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க முடி­யாது. 

  இந்த நிலைப்­பாட்­டினை நாம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் தெரி­வித்­து­விட்டோம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அர­சாங்கம் ஒன்று உரு­வாக நாம் இட­ம­ளிக்­கின்றோம். 

  அவர்­களின் தனி அர­சாங்கம் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஆட்­சியை முன்­னெ­டுத்து செல்­லட்டும். நாங்கள் எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­கின்றோம். அடுத்த பொதுத் தேர்­தலில் நாம் எமது ஆட்­சி­யினை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தயா­ராக உள்ளோம். 

  மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுவில் என்ன தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­கின்­றதோ அதற்கு சக­லரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். இப்­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழுவில் நாம் முன்­வைத்த கோரிக்­கைக்கே ஆத­ரவு அதி­க­மாக உள்­ளது. 

  நாம் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி எதி­ர­ணியில் அம­ருவோம் என்ற தீர்­மா­னத்தை மத்­திய குழுவில் ஏற்­று­கொள்ள வேண்டி வரும். அதனை விரும்­பாத நபர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்­து­ கொள்­வார்கள். இன்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இரண்டு துண்­டு­க­ளாக மாற்றம் பெறவும் முர ண்­ப­டவும் எமது தரப்பில் ஒரு சிலர் முன்­னெ­டுத்த காட்­டிக்­கொ­டுப்பு மட்­டுமே கார­ண­மெனத் தெரிவித்துள்ளாா். 

   கூட்டு எதி­ர­ணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை. எனினும் ஒரு சில­ரது சதித்­திட்­டங்­களின் மூல­மா­கவே நாம் இரு அணி­க­ளாக மோதிக்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. இப்­போதும் இரு அணி­யையும் இணைக்க நாம் முயற்­சித்துள்ளோம். 

  அது இல­கு­வான காரியம் அல்ல என்­பதும் எமக்குத் தெரியும். எனினும் மஹிந்த ராஜபக் ஷ அணி­யி­னரும் அவர்­க­ளது அணியில் இணைந்­து­கொள்ள அழைப்பு விடுத்­துள்­ளனர். 

  ஆகவே அவர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­திலும் எந்த சிக்­கலும் இல்லை ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய மக் கள் சுதந்­திர முன்­னணி ஆகிய கட்­சி­களை இணைத்து மீண்டும் பல­மான அரசா ங்கத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அந்த முயற்சி யில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். 

  அதனை குழப்ப சிலர் முயற்சித்தும் வருகின்றனர். அவர்களை நிராகரித்து எமது பயணத்தை முன்னெடுத்துச் செல்லவே நாம் விரும்புகின்றோம்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மஹிந்­த­வுடன் இணை­யவும் சம்மதம்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top