தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி தடை என - ஜனாதிபதி விசனம் - THAMILKINGDOM தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி தடை என - ஜனாதிபதி விசனம் - THAMILKINGDOM

  • Latest News

    தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி தடை என - ஜனாதிபதி விசனம்

    தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக் குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளாா். 

    கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளி நாடுகளுக்கு சென்றுவிடுவது இதற்கு காரணமாக உள்ளது என்றும் தாய் நாட் டுக்கான தங்களது பொறுப்புக்கள் குறி த்து தெளிவுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

    பொறியியல் மத்திய ஆலோசனை பணியகத்தின் 45ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.

    நாம் எமது மரபுகளையும் பாரம்பரியங்களையும் பேணி முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டார். இலங்கை பொறியி யலாளர்களின் திறமை, இயலுமைகள் மற்றும் ஆக்கத் திறன்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த கடந்த 45 வருட காலப்பதியில் பொறியியல் மத்திய ஆலோசனை பணியகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.

    பொறியியல் மத்திய ஆலோசனை பணியகத்தில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தொழில்வல்லுனர்களை பாராட்டி ஜனாதிபதியினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

    மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, மகா வலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திஸா நாயக்க, பொறியியல் மத்திய ஆலோசனை பணியகத்தின் தலைவர் ஜீ.டீ.ஏ. ஜயதிலக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துள்ளனா். 
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி தடை என - ஜனாதிபதி விசனம் Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top