வாழைச்சேனை ஆலய தீயில் ஆயிரக் கணக்கானோர் தீக்குளிப்பு.! - THAMILKINGDOM வாழைச்சேனை ஆலய தீயில் ஆயிரக் கணக்கானோர் தீக்குளிப்பு.! - THAMILKINGDOM
 • Latest News

  வாழைச்சேனை ஆலய தீயில் ஆயிரக் கணக்கானோர் தீக்குளிப்பு.!

  கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி மற்றும் தீ மிதிப்பு உற் சவம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

  கடந்த வெள்ளிக்கிழமை இரவு கும் பம் வைத்தலுடன் ஆரம்3த்து தொடர் ந்து நான்கு நாட்கள் மதியப் பூசை, இரவுப் பூசை என்பன இடம் பெற்று இன்று செவ்வாய்கிழமை திருக்குளி ர்த்தி மற்றும் தீ மிதிப்பு நிகழ்வு நடை பெற்றது.

   இங்கு வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, கல்மடு, கறுவாக்கேணி, சுங்காங்கேணி உட்பட பல கிராமங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொரு ட்டு தீ மிதிப்பில் கலந்து கொண்டனர். 

  சடங்கு உற்சவ பூசை நிகழ்வுகள் அனைத்தும் ஆலயத்தின் பிரதம குருவும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வாழைச்சேனை கண்ணகிபுரம் கிறவுன் விளையாட்டுக் கழகத்தி னரால் பக்த அடியார்கள் அனைவரும் தாக சாந்தியினை வழங்கியுள்ளனா்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வாழைச்சேனை ஆலய தீயில் ஆயிரக் கணக்கானோர் தீக்குளிப்பு.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top