ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டுமென்கிறாா் - மஹிந்த - THAMILKINGDOM ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டுமென்கிறாா் - மஹிந்த - THAMILKINGDOM

 • Latest News

  ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டுமென்கிறாா் - மஹிந்த

  ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள னா். ஆயினும் அத்தேர்தல் 2019 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக் கப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.


  வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சமய நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார். 

   மேலும் தெரிவிக்கையில், 

  நல்லாட்சியில் தொல்பொருள் தலங்கள் வகைதொகையின்றி அழிக்கப்படு கின்றன. விஜிதபுரவில் அண்மையில் ஒரு தலம் அழிக்கப்பட்டுள்ளது. இருபது வீடுகள் அமைப்பதற்கு பத்து ஏக்கர் பரப்பு அழிக்கப்பட்டுள்ளது.

  அம்பாறையிலுள்ள தொல்பொருள் பிரதேசங்கள் பெருவாரியாக அழிக்கப் பட்டுள்ளன. இவற்றை வேறு மதத்தினர் மேற்கொள்வதில்லை. தினந்தோறும் பெளத்தம் பற்றி பேசுவபர்களே இதனைச் செய்கின்றனர்.

  இவ்வாறான நிலையில் நாட்டில் சுந்தரமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தம் பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் மதத் தலங்களிலும் வரி அற விடுவதற்கு எதிர்பார்க்கின்றனர்.

  எனினும் தொல்பொருள் பிரதேசங்களும் சமயத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அது குறித்து அரசாங்கம் கவனயீனமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக் குறிப்பிட்டு வருகின்றனர். எனினும் அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

  2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்துமாறு அரசாங்கத்தை கோருகிறோம்.

  ஏனெனில் நாட்டில் தற்போது முறையான ஆட்சி இல்லை. பாராளுமன்றிலும் விதிமுறைகள் பேணப்படுயவதாக இல்லை. பாராளுமனறில் 16 உறுப்பினர் களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட்டுள்ளது. 

  ஆறு உறுப்பினர்களைக்கொண்ட கட்சிக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட் டுள்ளது. அவ்வாறானவர்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண் டிருக்கின்றனர். மேலும் சில கட்சிகள் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை பொறுப் பேற்று முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டுமென்கிறாா் - மஹிந்த Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top