Breaking News

அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவத்தை இணைத்தல்.!

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் கலந்துகொள்ளல் மற்றும் அவர்களை பல்வேறு நாடுகளுக்கு பணிக்கு அனுப்பு வதில் காணப்படும் குழப்பத்தில் கவனம் எடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்துள்ளது. 

இலங்கைக்கு விஜயமாகியுள்ள ஐக்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகாரங்களுக் கான ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் மேரி யமஷிடா மற்றும் இராணுவத்தளபதி லெப்டி னன் ஜெனெரல் மகேஷ் சேனாநாயக்க ஆகி யோருக்கிடையில் இராணுவ தலைமையகத் தில் நடைபெற்ற கலந்துரையாடலில் யமஷிடா தெரிவித்துள்ளார். 

2004 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் பணிபுரிந்த 134 இலங்கைப் படையினர் ஹெட்டியன் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமைதி காக்கும் படையணிக்கு இலங்கைப் படையி னரை அனுப்புவதில் இலங்கை பிரச்சினைகளைச் சந்தித்துள்ளது.