விக்கினேஸ்வரன் அணி தயார்! 24ல் அறிவிப்பு வெளியாகும்! - THAMILKINGDOM விக்கினேஸ்வரன் அணி தயார்! 24ல் அறிவிப்பு வெளியாகும்! - THAMILKINGDOM
 • Latest News

  விக்கினேஸ்வரன் அணி தயார்! 24ல் அறிவிப்பு வெளியாகும்!

  தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்
  தொடர்பாகவும் விக்கினேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பயணம் தொடர்பாகவும் அறிவிப்பதற்கான மாபெரும் மக்கள் ஒன்று கூடலிற்காக அழைப்பினை தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ளது.


  பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விவரிக்கையில்..

  தமிழ் மக்களின் தற்போதைய பிரதி நிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்ற மடைய வேண்டிய கால கட்டத்திலுள்ளது.

  இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபி லாசைகளை அடைந்து கொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண் டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொட ர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்று கூடல் 24.10.2018 (புதன்கிழமை) அன்று காலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில்; நடைபெறவுள்ளது.

  இக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விசேட உரையாற்றவுள்ளதோடு தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு தெரிவிக்கவுள்ளாா்.

  மேற்படி ஒன்றுகூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக்கடந்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள்,தொழில் சங்கங்கள் கல்விச் சமுகத்தினர் மற்றும் இளைஞர்- யுவதிகள், போன்ற அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

  வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் ஒக்டோபர் 23ம்திகதி நிறைவு பெற வுள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக பார்க்கப்படுகின்றது.

  தமிழ்த்தேசிய பேரவையை பலப்படுத்தி மக்கள் இயக்கமாக செயற்படுவது என்றும் தேர்தல் வந்ததும் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என முடிவு செய்யப்படுவது என்றும் இரண்டு வழிகளை இணைத்து ஒரு வழியை முன்வைக்கலாமெனவும் எதிர்பாா்க்கப்படுகின்றது.

   


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: விக்கினேஸ்வரன் அணி தயார்! 24ல் அறிவிப்பு வெளியாகும்! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top