Breaking News

மைத்திரியின் தீர்மானம் சரி கொந்தளிப்பில் சட்டத்துறை!!

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் சரியா னதே என அவர் சார்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக் கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறையின் மேல் மட்டம் இது தொடர்பில் உறுதியான வாதங்களை முன்வைக்க தயாராவதாக தகவல் மையங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா, பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான நெரின் புள்ளே, இந் திக்க தேமுனி டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா ஆகியோர் தயார் நிலையில் உள்ளதாக நீதிமன்றத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் பதிலிறுப்பதற்கு கால அவகாசம் கோரிய சட்ட மா அதிபர் இன்றைய தினம் அதற்கான பதில்களை வழங்கத் தயாராகி விட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.