Breaking News

மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

சிறிலங்காவின் பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகள் நாடாளுமன்ற அங்கீக ரிப்பின்படியே மேற்கொள்ளப்படவேண்டும் என்பதனால் அதற்கும் எதிர்ப்பை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

சிறிலங்காவில் தற்பொழுது சட்ட பூர் வமான ஒரு அரசாங்கம் இல்லை என் பதில் உறுதியாக நிற்கும் ஐக்கிய தேசி யக் கட்சி, பிரதமராக ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜ பக்‌ஷவின் பதவி சட்ட விரோதமான தெனத் தெரிவித்துள்ளது.

அதற்காக மூன்று முறை நாடாளு மன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளும் மஹிந்தவுக்கு எதிராக நிறை வேறியுள்ளதாக கூறுகின்றது. இந்த நிலையில் சட்ட விரோதமான பிரதமர் பத வியில் இருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் அலுவலகத்திற்காக ஒதுக் கப்பட்டுள்ள நிதி குறித்து நாடாளுமன்றின் அங்கீகாரம் இல்லை எனவும்,

அத்தகைய ஒரு அங்கீகார மற்ற நிதி ஒதுக்கீட்டுக்காக தாம் எதிர்ப்பை வெளியி டப் போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.