Breaking News

தமிழர் தாயக மாபெரும் இனவழிப்புக்கு பொறுப்புக் கூறலை நிராகரிக்கிறது இலங்கை!

இலங்கையின் அரசியலில் ஸ்திர மின்மை காரணமாக போர்க் குற்றங் கள் மறைக்கப்பட்டுள்ளன என்று லண்டனை சேர்ந்த கேட் க்ரோனின் பார்மன் என்ற அரசியல் விஞ்ஞான பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்கும் யுஎன் டிஸ்பெட்ச் என்ற இணையம் லண்டன் பேராசிரி  யரின் கருத்தை பதிவிட்டுள்ளது. 

இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்களாகின்றன. இப் போரின் போது பாரிய மனித அழிவுகள் பதிவாகியதாகவும், 40ஆயிரம் தமிழர்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப் பட்டு வருகின்றன. 

எனினும் இப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இதுவரை எவரும் நீதியின் முன்பாக கொண்டுவில்லை எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இதற்கு இலங்கையின் ஸ்திரமற்ற அரசியலே காரணமென லண்டனைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞான போராசியர் மேலும் தெரிவித்துள்ளார்.