Breaking News

இலங்கையர்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! நாளை தீர்ப்பு வருமா? (காணொளி)

அடிக்குமேல் அடி அடித்தால் அம்மி யும் நகரும் என்ற பழமொழி உண்மை யானால் சிறிலங்காவின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஒப்பமிட்டுக் கொடுத்தாலும், ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என தொடர்ந்தும் மைத்திரி அடிக்கும் அடா அ(வ)டி வேறுவழி யின்றி யானை அம்மியை நகர வைக்குமா? இதற்கும் சாத்தியங்கள் உண்டு என்பதை கொழும் புப்பட்சிகள் வழங்கும் அரசல் புரசலாக கதைகள்; சொல் கின்றன.

பிரதமர் பதவிக்காக ஐக்கியதேசியக் கட்சியின் முகம் ஒன்றைத் தெரிவு செய் வதற்காக, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு யானை மேற் பார்த்த ஐக்கிய தேசிய முன்னணி தயாராகின்றது என்ற செய்தியே இந்தக் கதைகளின் கருப்பொருளாக உள்ளது.

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்க தொடர்ந்தும் மைத்திரி மறுக்கு நிலை யில் இவ்வாறு ஒரு இரகசிய வாக்கெடுப்பை நடத்தி அதன் முடிவை பரக சியப்படுத்த யானைகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இவ்வாறான ஒரு இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக மீண்டும் ரணில் என்ற பழைய முகம்தான்; வருமா? இல்லை வேறு ஒரு புதிய முகம் வரக்கூடுமா என்பது தெரியவில்லை.

ஆனால் கொழும்புப்பட்சிகளின் இந்த அரசல் புரசலாக கதைக்கு அப்பால் அண் ணனுக்கு ஜே பாணியில் இன்றளவும் ரணிலுக்கே பிரதமர் பதவி என்பதில் யானைகள் உறுதியாகவே உள்ளனர். மறுபுறத்தே மைத்திரியும் ரணிலும் தொடர்ந்தும் சளைக்காது தமது வார்த்தைப்போர்களை தீவிரமாக்கியுள்ளனர்.

பிரதமர் கதிரையில் இருந்து துரத்தப்பட்ட ரணிலை மீண்டும் அதில் அமர விடமாட்டேன் என பாஞ்சாலி சபதம் பாணியில் மைத்திரி உரைக்கும் சூளு ரைகளுக்கு பதிலடிகளும் எள்ளல்களும் கிட்டுகின்றன.

மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்கும் என கொழும்பில் நேற்றுஇடம்பெற்ற நிகழ்வொன்றில் பிடிசாபம் கொடுத்த ரணில் ஐ.தே.க போட்ட பிச்சையால் அரசதலைவரான மைத்திரி, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக சத்தியம் செய்து அந்தச் சத்தியத்தை கடாசிவிட்டு செயற்படுகின் றாரெனக் கூறியதுடன் தன்னால் நாடு சீரழிந்ததென்று வாய் கூசாமல் மைத்திரி கூறினாலும் உண்மையில், யாரால் இந்த நாடு சீரழிந்துப் போகின்றதென்பது,

பாமர மக்களுக்குக்கூடத்தெரியுமென்றவர் இறுதியில் சர்வாதிகாரம் பொசுங் கும் ஜனநாயகம் வெல்லுமென சூளுரைத்தார். இதற்கிடையே தன்னையும் ரணில் நாசமாக்கினார் என வில்லனிடம் சிக்கி சீரழிந்த அபலை கதாநாயகி போல மைத்தரி கூறிய விடயம் இப்போது எள்ளலாகி விட்டது.

அந்தவகையில் ரணில் விக்கிரமசிங்க எந்த மைத்திரியை திருமணம் செய்தார் என்ற சந்தேகம் ஏற்படுவதாக எள்ளிய ஐ.தே.க முகமாக முஜீபுர் ரஹ்மான் ரணில் விக்கிரமசிங்கவை மண முடித்தவர் போல மைத்திரி கருத்துத் தெரி விப்பதாக விமர்சித்தார்.

தன்னையும் ரணில் நாசமாக்கினார் என மைத்திரி கூறும்கருத்தில் ரணிலின் வாழ்கைத்துணைவியின் பெயரும் மைத்திரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மைத்திரி மீதான ரணிலின் பதிலடிகள் வந்தாலும் மைத்திரியின் சொல்லடிகள் தொடரத்தான் செய்கின்றன.

நாட்டில் ஜனநாயகத்தை, ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்கிரம சிங்கவுக்கு இல்லையென்றவர் 25 ஆண்டுகளாக யானையின் முதன்மைப் பாகனாக செயற்படும் ரணில் யானைகளின் பின்வரிசை உறுப்பினர்கள் முன் னேற இடமளிக்கவில்லை என பக்கத்து இலைக்காரனுக்கு பாயசம் இல்லாத நிலைக்காக கவலைப்பட்டார்.

அதன் பின்னர் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய அவர் சகலநிதி ஒதுக்கீடுகளையும், உரியவகையில் செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற சேவைசெய்ய வேண்டுமென பணித்தார்.
ஆனால் நாட்டின் சமகால அரசின்மையற்ற நிலையால் ஏறச்சொன்னால் எருது முறைக்கும் இறங்கச்சொன்னால் முடவன் முறைபான் என்ற நிலை யில் அரசாங்க அதிகாரிகள் திண்டாடி வருவதையும் இங்கு குறிப்பிட வேண் டும்.

இதற்கிடையே இவ்வாறான நிலைமைக்குகாரணம் தான் பிரதமர் என்ற பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதே என்பதை தெரிந்தும் தெரியாதவா போல நாட்டின் நெருக்கடி நிலைக்குக்காரணம் தனக்கும் தனது அமைச்சரவைக்கும் நீதிமன்றம் போட்ட தடையுத்தரவு எனப்பசப்புகிறார் மஹிந்த.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நாட்டை வீழ்ச்சியடையச்செய்ய முனைந் ததால் அதனை நிறுத்தும் வகையில் தான் பிரதமர் பதவியை ஏற்றதாக மஹிந்த கதைசொன்னாலும் அவர் பிரதமராக ஒட்டியிருக்கும் கடந்த 5 வார காலப்பகுதியில் தான் நாடு அதியுச்ச வீழ்ச்சியை கண்டிருப்பது யதார்த்த மானது.

இலங்கைபோன்ற நாடுகளைப்பொறுத்தவரை பொதுச்சேவைகளில் உள்ள அதிகாரிகள் அரசியல்சாமரங்களுக்கு உட்படுவதால் நாட்டின் அரசியல் தட்ப வெப்பங்களை அறிந்தபடிதான் அதிகாரிகளும் இருப்பதால் புதிய ஒரு தேர்தல் மூலம் உருவாக்கப்படும் அரசாங்கத்தை எதிர்கொள்ளும் வரை அரசாங்க அதி காரிகளும் எமக்கு சோலி எதற்கு என கண்ணாமூச்சி ஆட்டத்தைத்தான் நடத் துவார்கள் ஏனெனில் ஒருதரப்பில் சாய்ந்து நின்றால் மறுதரப்பு வரும்போது தாம் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் அவர்களை தொடரவே செய்யும்.

இலங்கை அதிகாரிகளை பொறுத்தவரை பொது சேவை என்பது எவ்வளவு சிறந்தது அவசியமானது என்ற கற்பிதங்கள் பெரிதும் இல்லை. இப்போது இந்தவிடயத்தில் சிறிலங்காவை அரசியல்ரீதியில் ஆளும் பொதுசேவையில் யார் இருக்கவேண்டும்.

என்பதையாவது ஆகக்குறைந்தது சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் நாளை வழங்கக்கூடிய தீர்ப்பின் ஊடாக (நாளை அதுவருமா?) முடிவு செய்யுமா? இதற் கிடையே நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான மைத்திரியின் வர்த்த மானி அறிவித்தலுக்கு எதிரான தமது இடைக்காலத்தடை எதிர்வரும் சனி வரை (8ஆம் திகதி வரை) உச்ச நீதிமன்றம் நீடித்திருப்பதும் இங்கு குறிப் பிடத்தக்கது.

முன்னதாக நாளை வரையே நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந் தமை குறிப்பிடத்தக்கது சரி நாளையோ அல்லது எதிர்வரும் திங்களோ உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பின் ஊடாக குழப்பங்களுக்கு முடிவு கிட்டுமா? இதுதான் இப்போதைக்கு இலங்கையர்களுக்கு முக்கியமான வினாவாக உள்ளது.

- நன்றி ஐ.பி.சி. இணையத்திற்கு -