Breaking News

சர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி! ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.!

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத்தினரின் காவலில் இருந்த போது காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழுவின் ஆராய்ச்சி இயக்குனர் பெட் ரிக் பால் தலைமை எழுத்தாளராக உள்ள இந்த அறிக்கைக்கு, “சிறிலங்கா வில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 17-19ஆம் திகதிகளுக்கிடையில் எத் தனை பேர் காணமலாக்கப்பட்டுள்ள னர்?” என்று பெயரிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழர்கள் பலர் சரணடைந்த நிலையில் காணா மல் போயுள்ளனர். குறித்த அறிக்கையின் படி அதிகளவானவர்கள் ஒரே தரு ணத்தில் காணாமல் போயிருப்பது சிறிலங்காவிலேயே எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் அடிக்கடி நிகழும் காணாமலாக்கப்படுதல் மத்தியிலும் கூட 2009 மே 17, 18, 19ஆகிய மூன்று தினங்களில் போர் முடிவுக்கு வந்தபோது காண மலாக்கப்பட்ட செயற்பாடானது அசாதாரணமாகவே உள்ளது.

பல ஆண்டுகளாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் போர் முடிவு காலப் பகுதியில் காணாமல் போனவர்களின் விபரங்களை இறுதிக் கட்டத்தில் தப்பித்தவர்களிடமிருந்து பெற்றுச் சேகரித்து வருகின்றது.

அந்த வகையில் தற்போது 300இற்கும் அதிகமான பெயர்கள் மற்றும் புகைப் படங்கள் இருமொழி இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு சிறலங்காவிலுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் சேகரிக்கப்பட்ட இந்த பட்டியல் மற்றும் பிற பட்டியல்கள் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வுக் குழுவினரால் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை என்னவாக இருக் கும் என்பதற்கான புள்ளிவிவர பகுப்பாய்வு, ஏற்கனவே சேகரிக்கப்பட்ட பெயர் கள் மற்றும் இன்னும் குறிப்பிடப்படாதவை என சர்வதேச உண்மையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.