Breaking News

மைத்ரி விரும்பினால் பதவி விலகலாம், பிரதமரை தீர்மானிக்காதிருக்க முடியாது.!

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை கொண்டிருக்கும் ரணில் விக்கிரம சிங்கவை பிரதமராக நியமிக்காதிருக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை யென ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுக் கொடுத்தாலும் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லையென சிறி லங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் இரவு நடைபெற்ற மாநாடொன்றில் சூளு ரைத்துள்ளாா்.

எனினும் ஜனாதிபதி ரணிலை பிரதமராக நியமிக்காது இருப்பது சட்ட விரோத தமானது என்று தெரிவித்துள்ள மைத்ரிபால சிறிசேனவின் நெருங்கிய அரசி யல் சகாவாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்தசேனாரத்ன, மைத்ரி யின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபாலவினால் பிரதமராக நிய மிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கத்தின் அமைச்சர்களுக் கும் எதிராக நாடாளுமன்றில் நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நம்பி க்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

எனினும் இந்த தீர்மானங்களை மஹிந்த தரப்பும் அதேவேளைஜனாதிபதியும் நிராகரித்திருந்ததுடன், மஹிந்த பிரதமராகவும், அவரது விசுவாசிகள் அமைச் சர்களாகவும் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியமுன்ன ணியின் 102 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பி யின் ஆறு பேரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களுமான 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில், மஹிந்தவும் அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எந்த அதிகாரத்துடன் அரசாங்கத்தில் பதிவி வகிக்கிப்பதாக வினவியிருந்தனர்.

இந்த மனுவ டிசெம்பர் 3 ஆம் திகதி விசாரித்திருந்தமேன் முறையீட்டு நீதி மன்றம் மஹிந்தவும் அவரது சகாக்களும் அரசாங்க பதவிகளை வகிப்பதற்கு சட்டத்தில் அனமதியில்லை என்று அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலதடை உத்தரவையும் பிறப்பித்தது.

இதற்கு எதிராக நேற்றைய தினம் மஹிந்த தரப்பு உச்சநீதிமன்றில் மேன் முறையீடு செய்த நிலையில் டிசெம்பர் 4 ஆம் திகதியான நேற்றைய தினம் மாலை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் விசேடமாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைபிரதமராக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களைமுன்வைத்த மைத்ரி, ரணிலுக்கு பிரதமர் பதவியை வகிக்க எந்தவொரு தகுதியும் இல்லை என்றும் கூறியதுடன், இதனாலேயே அவருக்கு அந்தப் பதவியைகொடுக்க மறுப்பதாகவும் விளக்கமளித்திருந்தார்.

இவ் அறிவிப்பு குறித்து இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வு களில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு உழைத்திருந்தவரான மஹிந்த அர சாங்கத்தில் இருந்து மைத்ரியுடன் இணைந்து வெளியேறியிருந்த அரசியல் சகாவானஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த செனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

“ஜனாதிபதிக்கு அவ்வாறு செயற்பட முடியாது. அதற்க எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுப்பேன். ஜனாதிபதிக்கு ரணிலை பிரதமராக நியமிக்காதிருக்க முடியாது என்பதைஉறுதிப்படுத்திக்கொள்வதற்கான அனை த்துச் சட்ட நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்திற்கு அமைய யாரை பிர தமராக நியமிப்பது என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. இதற்கு முன் னர் இருந்த அரசியல் சசானத்திற்கு அமையஅதனை மேற்கொண்டிருக்கலாம்.

இதனை அவரை நேரில் சந்தித்த போது அவரது முகத்திற்கே நான் கூறியி ருந்தேன். பிரதமர் யார் என்பதை தெரிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத் திற்குஉரியதே ஒழிய, ஜனாதிபதிக்குரியது அல்ல.

இவைதான் ஜனவரி எட்டாம்திகதி நாம் அடைந்த வெற்றிகள் என்பதையும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தேன். அதற்காகத்தான் நீங்கள் என்னுடன் மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்தீர்கள் என்பதையும் ஞாபகப் படுத்தினேன்.

அப்போது அவர் அமைதியாக இருந்தார். அப்படியானால்நான் ஜனாதிபதி பதவி யிலிருந்து விலகுவேன் என்று கூறினார். நான் நாளை சுதந்திரக்கட்சியின் மாநாட்டிற்கு செல்லவுள்ளேன். அங்கு வைத்து இவற்றை கூறுவேன் என்றார். அவைஅவருக்குரிய வேலை.

அரசியல் சாசனப்படி அவர் தனது பதவியிலிருந்து விலகலாம். ஆனால் அவர் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது” என்றார் ராஜித்த. சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் ரணிலை மீண்டும் பிரதமராக்கப் போவதில்லை என்று சூளுரைத்திருந்த மைத்ரிபால சிறிசேன, எனினும்ஏழு நாட்களுக்குள் நாட்டில் எற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்திற்கு தீர்வுகாண்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு தொடர்பில் ராஜித்த சேனாரத்ன விடம் ஊடகவியலாளர்கள் வினவினர். இந்த கேள்விக்கு பதிலளித்த முன் னாள் அமைச்சர் ராஜித்த... “ எப்படியாவது இப் பிரச்சனைக்கு தீர்வு கண்டாக வேண்டும்.

ஏனெனில் அடுத்த ஆண்டுக்கு பணம் இல்லை. ஜனவரி முதலாம் திகதி முதல் சிறிலங்காவை கொண்டு நடத்துவதற்கு ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை. அதனால் அதற்குத் தேவையான வரவு செலவுத் திட்டத்தை டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

அதற்கு நாடாளுமன்றில்பெரும்பான்மை இருக்க வேண்டியது அவசியம். பெரும்பான்மை இல்லாத நிலையில் வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது.

 

ஜனாதிபதியே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.

ஏனெனில் இந்த அளவிற்கு நாட்டை மோசமான நெருக்கடிக்கள் தள்ளி விட்ட வரும்அவரே. இதனால் அவரை ஜனாதிபதியாக்கியது தொடர்பில் நாம் வேதனை அடைகின்றோம்.

களவு எடுப்பவனும் ஒருபோதும் தன்னை கள்ளன் என்று கூறிக்கொள்வ தில்லை. அதேபோல் தான் ஜனாதிபதியும் நாட்டை இந்தளவு மோசமான குழப் பத்திற்குள் இழுத்துப்போட்டதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

ஆனால் அறிவுல்ல அனைவருக்கும் நாட்டில் இந்த அராஜகத்தை ஏற்படுத் தியது யார் என்ற உண்மை தெரியும்” என்றார். நாட்டை மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணில் விக்கிரமசிங்க அழித்துவிட்டதாக மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் சுதந்திரக்கட்சிக் கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டு குறித்த வினவியபோது, ஐக்கிய தேசியக் கட் சியை ரணில் அழிக்கவில்லையெனக் குறிப்பிட்ட ராஜித்த சேனாரத்ன, மைத்ரிபால சிறிசேனவே நாட்டையும், அவரது சுதந்திரக்கட்சியையும் அழித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

“ஜனாதிபதி என்ன செய்திருக்கின்றார். நாட்டையும் அழித்து விட்டுள்ளது மாத் திரமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் அழித்துள்ளார். எமது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதுவரை எந்தவொரு அழிவும் ஏற்படவில்லை.

ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அழிவின்விளிம்பில் இருக்கின்றது. தற் போது எத்தனை பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில்அங்கம் வகிக்கின்றனர் என்று பாருங்கள்.

நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும்,ஆட்சியில் இருந்த கட்சியாகவும் திகழ்ந்த சுதந்திரக் கட்சி இன்றமூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கின் றது. இன்னும் சிறிது காலத்திற்கள் ஜே.வி.பி க்கும் பின்னால் தள்ளப்பட்டு விடும்” எனத் தெரிவித்துள்ளாா் ராஜித்த.