எதிர்க்கட்சி தலைவர் பதவி ; த. தே.கூ. வை ஆதரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.! - THAMILKINGDOM எதிர்க்கட்சி தலைவர் பதவி ; த. தே.கூ. வை ஆதரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.! - THAMILKINGDOM
 • Latest News

  எதிர்க்கட்சி தலைவர் பதவி ; த. தே.கூ. வை ஆதரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.!

  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்ப தற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதர வளிப்பதற்கு அரசாங்கம் தன்னாலான  சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென இலங்கை தேசிய சமாதான பேரவை எச்சரிக்கை விடுத்துள் ளது.

  தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற் றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா விடுத்திருக்கும் அறிக்கையொன் றில் விவரிக்கையில்….,

  அண்மைய அரசியல் நெருக்கடியின் பின் புலத்தில் நோக்கும்போது பாராளு மன் றத்தைக் கலைத்ததில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவே அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்த அதேவேளை,

  இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்புடனும் பேரம் பேசாமல் அர சியலமைப்பின் பிரகாரம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுமுறைகளைக் கடைப் பிடித்துள்ளது.

  ஆனால், அரசியல் நெருக்கடியின் முடிவில் கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிக்கலான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.அதாவது, அரசியல் நெருக் கடியின்போது தாங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளினால் தமிழ் மக்கள் பெற்றிருக்கக்கூடிய பயன் என்று எதையும் தங்கள் வாக்காளர்களுக்கு காண் பிக்க இயலாதவர்களாக கூட்டமைப்பின் தலைவர்கள் இருக்கிறார்கள்.

  அவ்வாறு பயன் எதையும் காட்டமுடியாமல் போகுமேயானால் தீவிர தமிழ் தேசியவாத கட்சிகளின் பிரசாரங்களின் விளைவாக கூட்டமைப்பின் அரசி யல் பலம் அருகிப்போய்விடக்கூடிய சாத்தியம் உள்ளது.

  எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு நாட்டுக்குள்ளும் வெளியேயும் ஒரு உத்தியோகபூர்வ மதிப்பு அந்தஸ்தை வழங்கியது. கூட்டமைப்பின் தலை வர் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களின் வரிசையில் ஒருவராகவும் விளங் கக்கூடியதாக இருந்தது.

  இது கூட்டமைப்புக்கோ அல்லது அதற்கு வாக்களித்த தமிழ்ச் சமூகத்துக்கோ வெறுமனே ஒரு அடையாளபூர்வமான கௌரவம் அல்ல.எதிர்க்கட்சித் தலை வர் பதவி கூட்டமைப்புக்கு முக்கியமாக இருந்ததற்கு மிகுந்த நடைமுறைக் காரணங்களும் உள்ளன.

  எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பிலான சர்ச்சையில் கூட்டமைப்பு நீதி மன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளுக்குத் தயாராவதாகவும் செய் திகள் வெளியாகியிருக்கின்றன.

  சுய நலன்களின் அடிப்படையில் செயற்படுகின்ற அரசியல் தலைமைத்து வங்களைப் போலன்றி , நீதிமன்றங்கள் தர்க்கநியாயத்துடன் பிரச்சினை களை அணுகக்கூடிய ஆற்றலைக்கொண்டுள்ளன என்பது இப்போது நிரூபிக் கப்பட்டுள்ளது.

  நீதிமன்றத்தின் முன்னிலையில் கூட்டமைப்பினால் இரு முகக்கிய வாதங் களை முன்வைக்கமுடியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலை வராக இருக்கும் ஜனாதிபதி சிறிசேன அரசாங்கத்தின் அங்கமாக உள்ளாா்.

  அதனால் அவரின் முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சித் தலைவராக தர்க்க நியாயத்துக்குப் பொருந்தாது. ஜனாதிபதி மூன்று அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் வைத்துள்ளாா்.

  இரண்டாவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக இல்லாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது.

  இத்தகையதொரு சூழ்நிலையிலே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்கு கூட்டமைப்பு முன்னெடுக்கக்கூடிய முயற்சிகளை ஆதரிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கையில் உள்ளது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: எதிர்க்கட்சி தலைவர் பதவி ; த. தே.கூ. வை ஆதரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top