நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் -கூட்டமைப்பும் ஆதரவு - THAMILKINGDOM நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் -கூட்டமைப்பும் ஆதரவு - THAMILKINGDOM

 • Latest News

  நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் -கூட்டமைப்பும் ஆதரவு

  2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

  31 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

  தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

  ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

  ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

  வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவதும் இறுதியுமான வாக்கெடுப்பு சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றில் இடம்பெற்றது.

  கடந்த மாதம் 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் -கூட்டமைப்பும் ஆதரவு Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top