தமிழர்களை ஆயுத முனையில் அடக்க எத்தனிக்கும் இராணுவத்தினர் - சிறிதரன் - THAMILKINGDOM தமிழர்களை ஆயுத முனையில் அடக்க எத்தனிக்கும் இராணுவத்தினர் - சிறிதரன் - THAMILKINGDOM
 • Latest News

  தமிழர்களை ஆயுத முனையில் அடக்க எத்தனிக்கும் இராணுவத்தினர் - சிறிதரன்

  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தீவிர வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண் டுத் தாக்குதலானது, ஈழத்தமிழர் களை எப்பொழுது ஆயுத ரீதியாக அடக்கி வைத்திருக்க முடியுமென சிங்கள இராணுவச் சிந்தனையோடு அவர்கள் எதிர்பார்த் தார்களோ அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் இப்பொழுது அவர்களின் நடவடிக்கை களும் தொடர்ந்த வண்ணமுள்ளன என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித் துள்ளார்.

  ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சூழலில் ஏப்பரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் நடைபெற்ற அரசியல் மாற்றம் என்பதும் தீவிரவாதத் தாக்குதலின் நட வடிக்கை என்பதும் ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்தின் பாதையில் ஒரு வித்தியாசமான போக்கினை அல்லது மாற்றுச் சிந்திக்க வேண்டிய ஒரு சூழ லை உருவாக்கியுள்ளது.

  இந்த நிலையில் அரசியல் சூழல் மாற்றம் பெறாதவகையில் குண்டு வெடிப்பு கள் நடைபெற்ற இடங்களைத் தவிர பாதுகாப்பு என்ற அடிப்படையிலே இரா ணுவத்தினர், பொலிஸார், கடற்படையினரின் செயற்பாடுகள் என்பது தமி ழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில், குறிப்பாக தமிழர்கள் குடியிருக்கின்ற பிர தேசங்களில் அபரிதமான வகையிலே அவர்களை அடக்குகின்ற முறையா கவே காணப்படுகின்றது.

  இது எப்பொழுது தமிழர்களை ஆயுத ரீதியாக அடக்கி வைத்திருக்க முடியும் என்று சிங்கள இராணுவச் சிந்தனையோடு அவர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் இப்பொழுது அவர்களின் நடவ டிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

  இந்த நிலையில், இந்தக் காலச்சூழல் என்பது எம்மவர்களைப் பொறுத்த வரை யில் எமது மக்களுக்கு இன்னுமொரு நிம்மதியான சூழலினை உருவாக்கித் தரவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழர்களை ஆயுத முனையில் அடக்க எத்தனிக்கும் இராணுவத்தினர் - சிறிதரன் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top