Breaking News

இலங்கைக்கு ஐ.நா.வின் விசேட பிரதி நிதியை நியமிக்குக - ஐ.நா.செயலருக்கு விக்கி கடிதம்

வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் தொடரும் ­வரும் மனித உரிமை மீறல்­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கு ஐ.நா. மனித உரி­மைகள் கண்­கா­ணிப்புக் குழு ஒன்றை இலங்­கையில் அமைக்க வேண்டுமென ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் விசேட பிர­தி­நிதி ஒரு­வரை நிய­மிக்குமாறு வட­ மா­காண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் ஐ.நா. செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ குட்­ர­ஸுக்கு கடி தம் ஒன்றை அனுப்­பி வைத்துள்ளாா். 

வடக்கு, கிழக்கில் பெரு­ம­ளவில் இரா­ணுவம் குவிக்­கப்­பட்டு தமிழர் நிலங்­களில் இரா­ணுவ அனு­ச­ர­ணை­க­ளு டன் குடி­யேற்­றங்கள் நடை­பெ­று­வ­தா­கவும் பௌத்த மேலா­திக்­கத்தைத் தொடர்ந்து ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் விக்­னேஸ்­வரன் இக் கடி­தத்தில் குற் றம் சாட்­டி­யுள்ளார்.

விக்­னேஸ்­வரன் எழு­திய கடி­தத்தின் விபரம் வரு­மாறு,

இரா­ணு­வ­மா­னது வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது நாட்டின் ஏனைய பகு­தி­களை பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்­களிலிருந்து பாது­காக் கும் அதன் தன்­மையை விட்­டுக்­கொ­டுக்கும் வகையில் அமை­கின்­றது.

அதே­வேளை, தமிழ் மக்­களை அர­சியல் ரீதி­யா­கவும் சமூக ரீதி­யா­கவும் அடக்­கு­மு­றைக்­குட்­ப­டுத்தும் வகையில் அவ­ச­ர­ கால சட்­டத்தை அர­சாங்கம் துஷ்­பி­ர­யோகம் செய்­வ­துடன், தமிழர் நிலங்­களில் இரா­ணுவ அனு­ச­ர­ணை­யுடன் குடி­யேற்­றங்கள் நடை­பெ­று ­வ­தற்கும் பௌத்த மேலா­திக்­கத்தை தொடர்ந்து ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் அனு­ம­திக்­கின்­றது.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் இடம்­பெறும் மனித உரிமை மீறல்­களைக் கண்­கா­ணிக்க ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்புக் குழு ஒன்றை அமைப்­ப­தற்­கான அவ­சியம் குறித்து இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் உங்­க­ளிடம் விடுத்த கோரிக்­கையை அவ­ச­ர­மாக உங்கள் கவ­னத்­துக்குக் கொண்­டு­ வ­ரு­கின்றேன்.

அத்­துடன் மனித உரி­மைகள் தொடர்பில் இலங்­கைக்­கான விசேட பிர­தி­ நிதி ஒரு­வரை ஐ.நா. மனித உரி­மைகள் சபை நிய­மிக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­து­கின்றேன்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வவு­னி­யா­வுக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் இடை யில் தற்­போது 10 வரை­யி­லான இரா­ணுவக் காவ­ல­ரண்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், வவு­னி­யா­வுக்கும் கொழும்­புக்கும் இடையில் அநே­க­மாக அப்­ப­டி­யான எந்தக் காவ­ல­ரண்­களும் அமைக்­கப்­ப­ட­வில்லை.

இந்த இரா­ணுவக் காவ­ல­ரண்கள் எண்­ணற்ற மனித உரிமை மீறல்கள் இடம்­பெறும் இடங்­க­ளா­கவும், தமிழ் மக்கள் குறிப்­பாக பெண்கள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­படும் இடங்­க­ளா­கவும், தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைக்­கப்­படும் இடங்­க­ளா­கவும் இருக்­கின்­றன.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் சமர்ப்­பித்­துள்ள ஏரா­ள­மான மனுக்­களைக் கவ­னத்தில் எடுத்து இலங்­கைக்­கான ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் விசேட பிர­தி­நிதி ஒரு­வரை நிய­மிக்­க­ வேண்­டிய அவ­சரத் தேவையை வலி­யு­றுத்­து­கின்றேன்.

கடந்த 10 வரு­டங்­களில் படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்ள மனித உரிமை மீறல்­க­ளையும் இந்த விசேட பிர­தி­நிதி கவ­னத்தில் எடுக்­க ­வேண்டும்.

இறுதி யுத்­தத்­தின்­போது இரா­ணு­வத்­தி­னரால் கொல்­லப்­பட்ட மற்றும் கணக் கில் வராமல் காணாமல் போயுள்ள 70,000க்கும் அதி­க­மான மக்­களை 10ஆவது ஆண்டு முள்­ளி­வாய்க்கால் இனப்­ப­டு­கொலை நாள் நினைவுகூர்ந்­தது. இந்த அப்­பாவி மக்கள் தவிர, அர­சாங்கப் படை­க­ளிடம் வெள்­ளைக்­கொ­டி­க­ளுடன் சரணடைந்த விடு­த­லைப்­ பு­லி­களின் உயர்மட்ட உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆகவே, இந்தத் தருணத்தில் இலங்கை யில் யுத்தத்தின்போதும் யுத்தத்துக்குப் பின்னரும் நடைபெற்ற, நடைபெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்து கின்றேன். இது சர்வதேசச் சட்டம், பாதுகாப்பு ஆகியவற்றின் ஆட்சிக்கும் பிராந் தியத்தின் செம்மைக்கும் மிகவும் முக்கியமானது.