சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும் - THAMILKINGDOM சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும் - THAMILKINGDOM
 • Latest News

  சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும்

  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவா லயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவு களுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும், திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் தெரிவித்துள்ளார்.

  ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு களில் உயிர்நீத்த உறவுகளின் குடும் பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கல ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

  கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற் பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க் கிழமை (21) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேரால யத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் நண்பகல் 12.00 மணியளவில் மட் டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசையும் நடைபெறவுள்ளது. அத்துடன் அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும் Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top