சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது - THAMILKINGDOM சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது - THAMILKINGDOM
 • Latest News

  சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது

  யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசார ணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

  யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட் படுத்தப்பட்டுள்ளார். தனது முக நூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளார் என்று சந்தேகநபர் விசாரணையில் தெரி வித்துள்ளார்.

  தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும்.

  இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம். புதன்கிழமை 8.5.19 பாட சாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம்.

  அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார், எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top