தற்போது தேர்தலுக்கான அவசியம் என்ன? ; குமார வெல்கம - THAMILKINGDOM தற்போது தேர்தலுக்கான அவசியம் என்ன? ; குமார வெல்கம - THAMILKINGDOM
 • Latest News

  தற்போது தேர்தலுக்கான அவசியம் என்ன? ; குமார வெல்கம

  நூற்றுக்கணக்காக உயிர்களைப் பலியெடுத்த குண்டுத்தாக்குதல்களால் ஏற் பட்ட துயரத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இவ்வாறான நிலைமை யில் தேர்தலுக்கு செல்ல வேண்டிய தேவை என்ன என்று ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கேள்வியெழுப் பினார்.

  இது குறித்து மேலும் தெரிவித்த அவர், தற் போது தேர்தலை நடத்துவதற்கான தேவைதான் என்ன? ஜனாதிபதி தேர்த லுக்கு இன்னும் 6 மாதங்களே காணப்படு கின்றன.

  இந்த ஆறு மாத காலத்திற்குள் அனை வரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டதன் பின்னர் தாரள மாக தேர்தலுக்குச் செல்ல முடியும். ஜனாதிபதி தேர்தலுக்கும் செல்ல முடியும். நாட்டிலுள்ள வயதான அரசியல் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துள்ளது.

  நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்த குண்டு தாக்குதல்களால் ஏற் பட்ட துயரத்திலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இது போன்ற தொரு சந்தர்ப்பத்தில் தேர்தலைப்பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

  இவ்வாறானவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதனாலேயே இது போன்ற தொரு பாரிய அழிவுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள் ளதாகத் தெரிவித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தற்போது தேர்தலுக்கான அவசியம் என்ன? ; குமார வெல்கம Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top