எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது.? - THAMILKINGDOM எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது.? - THAMILKINGDOM
 • Latest News

  எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது.?

  ஓமான் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற் கொள்வதற்கு முன்னர் ஈரான் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடாத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. 

  ஓமான்வளைகுடாவில் அமெரிக்கா வின் ஆளில்லாவிமானங்கள் காணப் படுவதை அவதானித்த ஈரானின் பாது காப்பு படையினர் அமெரிக்க விமா னம் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க அதி காரியொருவர் சிஎன்என்னிற்கு தெரி வித்துள்ளார்.

  எனினும் குறித்த ஏவுகணை இலக்கை தாக்க தவறியது என தெரிவித்துள்ள அந்த அதிகாரி ஏவுகணை கடலில் விழுந்ததாகத் தெரிவித்துள்ளாா்.

  ஈரானின் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அமெரிக்காவின் எம் கியு-9 ரீப்பர் ரக விமானங்கள் ஈரானிய கடற்படை கலங்கள் எண்ணெய்க் கப்பல்களை நோக்கி செல்வதை அவதானித்தன எனவும் தெரிவித்துள்ள அதி காரி எனினும் எண்ணெய்க்கப்பல் மீது தாக்குதல் இடம்பெறுவதை ஆளில்லா விமானங்கள் அவதானித்தனவா என்பது குறித்து தகவல் எதனையும் வெளி யிட மறுத்துள்ளார்.

  இதேவேளை சில நாட்களிற்கு முன்னர் ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் ஈரா னின் ஏவுகணைகளை பயன்படுத்தி செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தினார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலிற்கு முன்னர் என்ன நடந்தது.? Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top