அன்றிழைத்த தவறை இன்றிழைக்கக் கூடாது - விஜயகலா - THAMILKINGDOM அன்றிழைத்த தவறை இன்றிழைக்கக் கூடாது - விஜயகலா - THAMILKINGDOM
 • Latest News

  அன்றிழைத்த தவறை இன்றிழைக்கக் கூடாது - விஜயகலா

  இந்த நாட்டிற்கு ஒரு அரசியல் தலை வரை, தேசியத் தலைவரை தேட வேண்டும். இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்கா விட்டால் நாங்கள் 2005 ஆம் ஆண்டு விட்ட பிழையை மீண் டும் இன்னொரு இடத்திலே சந்திக்க வேண்டிவரும்.
  2005 ஆம் ஆண்டு நாம் ஓர் சரியான முடிவு எடுக்காததன் காரணமாகத் தான் சகல உறவுகளும், தமது உடைமைகளை இழந்து நிற்கதியாக நிற்கி றோம். என கல்வி இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித் துள்ளாா்.

  நேற்று புதன்கிழமை (05) பருத்தித் துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 1579 சமூர்த்திப் பயனாளிகளுக்கு சமூர்த்தி உரித்து வழங்கும் நிகழ்வு புற்றளை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ தலைமை யில் நடைபெற்றது. அங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட போதே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

   மேலும் தெரிவிக்கையில்,

  1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தித் திட்டத்தில் கடந்த காலங் களில் இருந்து பயனாளிகளின் எண் ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. கொடுத்ததை வெட்டிய நிலையில் அதை நாம் தடுத்து நிறுத்தினோம். மாற்று வாக்குகளை போட்டதன் காரணமாக வேறு வழிகளில் ஊடுருவி அவற்றை நிறுத்திய வரலாறுகள் கட ந்த காலங்களில் இருந்தது.

  சந்திரிகா ,மகிந்த ஆகியோர் இரண்டு தடவைகள் ஜனாதிபதி ஆவதற்கு வாக்க ளித்ததன் காரணமாக தமிழ் ஆயுதக் குழுக்களிற்கு பின்னாலே விலை போனார்கள். ஏனெனில் நீங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குகளால் வெள்ளை வேன் கலாசாரம் , காணாமல் போனவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர்கள் இல்லாது ஒழிக்கப்பட்டார்கள்.

  இறுதி யுத்தத்தை கொண்டுவருவதற்காக அரசாங்கத்திற்கு துணை போனார் கள், காட்டிக் கொடுத்தார்கள் இப்படி எத்தனையோ வழிகளில் தீங்கு செய்தார் கள். இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக முள்ளிவாய்க்கா லில் இனப்படுகொலை செய்வதற்காக உதவி செய்தார்கள்.

  எமது அரசாங்கம் 22 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவ தற்கு அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தில் கூடுதலானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பிரத மரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

  சமூர்த்தி திட்டப் பயனாளிகளை எப்படி தெரிவு செய்தீர்களோ அதே போல பட்டதாரிகள் விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி நேர்முகப் பரீட்சை நடத் தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு தயா ராகிக் கொண்டிருக்கிறது. வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது திறை வடைந்ததன் பின்னர் நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள் ளாா்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அன்றிழைத்த தவறை இன்றிழைக்கக் கூடாது - விஜயகலா Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top