இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியது அவுஸ்திரேலியா - THAMILKINGDOM இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியது அவுஸ்திரேலியா - THAMILKINGDOM
 • Latest News

  இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியது அவுஸ்திரேலியா

  இலங்கைக்கான பயணத்தடையை அவுஸ்திரேலியா தளர்த்தியுள்ளது.

  பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள போதிலும், நாட்டு நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிக்கை ஒன்றினூடாக அவுஸ்தி ரேலியா வௌி விவகார அமைச்சு தமது பிரஜைகளுக்கு அறிவித்துள் ளது.

  இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள் ளும் போது, பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் குறித்த அறிக்கையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

  ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைகான பயணத் தடையை விதித்திருந்தன.

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியது அவுஸ்திரேலியா Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top