Breaking News

அஸ்கிரியபீட மாநாயக்கருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப்பெறவேண்டும் : எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு எதிராக மநாயக்க தேரர்கள் குறிப்பிடும் கருத்துக்களை முடக் குவதற்காகவே அஸ்கிரியபீட மாநாயக்கர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் முறைப்பாட்டை மீள பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் ஒட்டு மொத்த பௌத்த சிங்கள மக்க ளும் ஒன்றுபட வேண்டிய நிலைமை தோற்றம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் சானக வக்கும்பர தெரி வித்துள்ளாா்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சி நாட்டு மக்களுக்கு எதி ராக செயற்படும் போது குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் உரிமை மகாநாயக்க தேரர்களுக்கு உண்டு.

அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்தமதத்திற்கு அனைத்து இடங்களிலும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை நடப்பு அரசாங்கம் பின்பற்ற வில்லை.

தொடர்ந்து பௌத்த மத பிக்குகள் பல அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர். அத்துடன் பௌத்த மதத்தை இரண்டாம் பட்சமாக்கும் வழி முறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அஸ்கிரிய பீட மாநாயக்க தேரரை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது. இம் முறைப்பாட்டை செய்தவர்கள் முறைப்பாட்டை மீள பெற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லாவிடின் மதத் தலைவர்களை பாதுகாப்பதற்கு சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு நிகழ்ந்தால் பாரிய எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.