மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை ! - THAMILKINGDOM மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை ! - THAMILKINGDOM
 • Latest News

  மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை !

  வங்காள விரிகுடா கடற்பரப்பு பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப் படுவதால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை அப் பகுதிக் குச் செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரி வித்துள்ளது.

  இந்நிலையில் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் கடற்கரைகளில் காற்றின் வேகம் சுமார் 60 கிலோ மீற் றர் வரை வீசக்கூடுமெனவும் அப் பகு திகளில் மீனவர்களை மீன்பிடியில் ஈடுபட வேண்டாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

   இன்று மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் காற்றுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top