Breaking News

ஆட்சி மாற்றம் மூலம் தமிழர்கள் எதிர்பார்த்த விடயங்கள் எட்டவில்லை - சுமந்திரன்

"ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை என்பதே உண்மையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளாா். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத் திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற் றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரி வித்த போதே மேற்கண்டவாறு தெரி வித்துள்ளாா்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல கிட்டவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெற வில்லை என்பதே உண்மையான விடயம். ஆனால், ஏதும் நடைபெறவில்லை என்று கூறமுடியாது.

காணி விடுவிப்பு, இராணுவப் பிரசன்னம், கைதிகள் விடுதலை என்பவற்றில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசமைப்பு விடயத்திலும் ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் தொட்டு நிற்கின்றது.

முழுமை பெறாதபோதும் அதை முடிவுறுத்தும் தறுவாய்க்கு வந்துள்ளோம். அதேபோன்று நடைபெறாத விடயங்களும் உண்டு" எனத் தெரிவித்துள்ளாா்.