அபிவிருத்திக்குழு கூட்டத்தில் துப்பாக்கி கேட்ட செல்வம் எம்.பி. - THAMILKINGDOM அபிவிருத்திக்குழு கூட்டத்தில் துப்பாக்கி கேட்ட செல்வம் எம்.பி. - THAMILKINGDOM
 • Latest News

  அபிவிருத்திக்குழு கூட்டத்தில் துப்பாக்கி கேட்ட செல்வம் எம்.பி.

  வவுனியா அபிவிருத்திகுழு கூட்டத்தில் துப்பாக்கி இருந்தால் (சொட்கன்) எமக்கும் தாருங்கள் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளாா்.

  இன்று வவுனியா மாவட்ட செயலகத் தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அண்மைக் காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட்கன் கள் (துப்பாக்கி) மீள எடுக் கப்பட்டமையினால் தற்போது விவசா யிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுப்பதாகத் தெரி வித்திருந்தார்.

  மேலும் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவத னால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் சொட்கன் (துப்பாக்கிகள்) வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் சிவசக்தி ஆனந்தன் என தெரிவித்துள்ளாா்.

  இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாமென அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரான ரிசாட் பதியுர்தீன் பொலிஸாரிடம் கேட்டபோது அவர் கள் பாதுகாப்பு அமைச்சில் பெறவேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

  அத்துடன் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அவ் விண்ணப்பத்தினை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

  இதன்போது குறுக்கிட்ட வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லம் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளாா்.

  இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் பழைய ஞாபகங்கள் வந்துள்ளது போல் உள்ளதாக செல்வம் அடைக்கலநாதனை பார்த்து தெரிவித்துள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அபிவிருத்திக்குழு கூட்டத்தில் துப்பாக்கி கேட்ட செல்வம் எம்.பி. Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top