மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளுக்காக தொலைக்காட்சி சேவை ! - THAMILKINGDOM மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளுக்காக தொலைக்காட்சி சேவை ! - THAMILKINGDOM

  • Latest News

    மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளுக்காக தொலைக்காட்சி சேவை !

    கல்விசார் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரத்தியேக தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

    தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். 

    தெற்காசியாவிலேயே இவ்வாறான கல்விசார் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்படுவது இதுவே முதற்தடைவை என அமைச்சர் இதன்போது கூறியுள்ளார். 

    இவ்வாறான தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெருமால்  தெரிவித்துள்ளார். குறித்த தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

    அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தேசிய பாடசாலையை அமைக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும் குறித்த நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளுக்காக தொலைக்காட்சி சேவை ! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
    Scroll to Top