மாரடைப்பு, பக்கவாதம் - சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது! - THAMILKINGDOM மாரடைப்பு, பக்கவாதம் - சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது! - THAMILKINGDOM
 • Latest News

  மாரடைப்பு, பக்கவாதம் - சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது!

  மாரடைப்பு காரணமாக பக்கவாத நிலைக்கு சென்ற நடிகர் வடிவேல் பாலாஜி சிகிச்சைக்கு பணமில்லாத நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

  விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? அது இது எது, ஜோடி நம்பர்-1, கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. காமடி கிங் வடிவேலின் முழு தோற்றத்தை, அவரது ஸ்டைலில் டயலாக் டெலிவரி என்று ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். கடந்த 15 நாள்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ளார். 
  சில நாள்கள் தனியார் மருத்துவமனையில் வடிவேலு பாலாஜி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினரிடத்தில்சிகிச்சைக்கு தேவையான பில் தொகையை செலுத்த பணமில்லை என்று சொல்லப்படுகிறது. உதவி செய்யவும் யாரும் முன் வரவில்லை. இதையடுத்து, இன்று காலைதான் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட நாளிலேயே இறந்தும் போனார். 

  தற்போது, 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர்.நடிகர் பாலாசரணவணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அண்ணன் வடிவேல் பாலாஜி அவர்களது இறப்பு மாபெரும் அதிரச்சி அளிக்கிறது...அண்ணனது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.  
  இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த கோலமாவு கோகிலா என்ற படத்திலும் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். வடிவேலு பாலாஜி நடிகர் சிவகார்த்திகேயனும் நல்ல நட்பு கொண்டிருந்தார்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாரடைப்பு, பக்கவாதம் - சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top