தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான விசேட அறிவித்தல்! - THAMILKINGDOM தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான விசேட அறிவித்தல்! - THAMILKINGDOM
 • Latest News

  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான விசேட அறிவித்தல்!

  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையங்களை நாளை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

  கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் எல்லைப்பகுதிகள் மற்றும் திவுலபிட்டிய, ஜாஎல, கந்தான, சீதுவ ஆகிய பகுதிகளில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் மீள அறிவிக்கும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

  குறித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சதொச, ஒசுசல மருந்தகம், பல்பொருள் அங்காடி, மீன் விற்பனை நிலையங்களை திறப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான விசேட அறிவித்தல்! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top