குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா? - THAMILKINGDOM குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா? - THAMILKINGDOM
 • Latest News

  குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா?

  வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தபோது அதை யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் பீட்டர் பால் தன் கணவர் என்று எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை பார்த்தவர்கள் வனிதாவை அடுத்த பெண்ணின் குடும்பத்தை கெடுத்தவர் என்று பலரும் விளாசினார்கள். 

  பீட்டர் பால் ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு என்று எலிசபெத் ஹெலனும், அவரின் மகனும் தெரிவித்தார்கள். ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை என்றும், தங்கள் திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார்.  

  ஆகாத கணவரை, பொம்பள பொறுக்கி என்று சொல்கிறார் ஹெலன். அவருக்கு தேவை விவாகரத்து, அது நிச்சயம் கிடைக்கும் என்றார் வனிதா. தன் கணவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் வனிதா.  

  இந்நிலையில் தன் 40வது பிறந்தநாளை கொண்டாட வனிதா குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். கோவாவில் வனிதாவும், பீட்டர் பாலும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. கோவாவில் பீட்டர் பால் மது அருந்திவிட்டு வனிதாவிடம் பிரச்சனை செய்தாராம். வம்பு வேண்டாம் என்று அமைதியாக இருந்த வனிதா, ஒரு கட்டத்தில் கடுப்பாகி பீட்டர் பாலை அடித்து துவைத்துவிட்டாராம்.  

  அடி வாங்கிய பிறகு பீட்டர் பால் வனிதாவை பிரிந்து சென்றுவிட்டாராம். அவர் தங்கியிருந்த இடத்தை தெரிந்து கொண்டு அங்கும் சென்று வனிதா அடித்ததாக கூறப்படுகிறது. தற்போது பீட்டர் பால் போக இடமில்லாமல் பாட்டிலும், கையுமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.    

  வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்துவிட்டதை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் உறுதி செய்துள்ளார். இது குறித்து ரவீந்தர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,  

  ஆமாம், உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகிவிட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி என்று தெரிவித்துள்ளார்.  

  ரவீந்தரின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,  

  இந்த கல்யாணம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது என்பது தெரிந்தது தானே. இந்த பீட்டர் பாலுக்கு தேவையா, அடி வாங்கியது தான் மிச்சம். அடுத்தவரின் கணவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது.  

  பீட்டர் பாலின் மனைவி மற்றும் பிள்ளைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. கர்மா சும்மா விடாது என்று தெரிவித்துள்ளனர்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பாலை அடித்து விரட்டிய வனிதா? Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top