Breaking News

WhatsApp Tips : மறைமுகமாக நிரம்பும் ஸ்டோரேஜ்! - நிறுத்துவது எப்படி?


உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் இந்த சாட் ஆப் நிறைய பயனர்களைப் பெற்றுள்ளது, அதாவது மக்கள் மேலுமதிக ஸ்மார்ட்போன்களை வாங்க வாங்க வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரித்து வருகிறது. 

அப்படியான வாட்ஸ்ஆப் வழியாக நீங்கள் பெறும் ஒவ்வொரு வீடியோ மற்றும் புகைப்படத்தையும் வாட்ஸ்அப் டவுன்லோட் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்து வைப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால், கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.  

அதைத் தடுக்க ஒரு செயல்முறை உள்ளது. அதை பற்றிய படிப்படியான எளிமையான வழிமுறைகளை பற்றித்தான் இந்த கட்டுரையின் வழியாக பார்க்கப் போகிறோம்.  

வழிமுறை 01: வாட்ஸ்அப்பைத் திறந்து, மேல்-வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளைக் கிளிக் செய்து, பின்னர் 'செட்டிங்ஸ்' என்பதைக் கிளிக் செய்க.  

வழிமுறை 02: பின்னர் Data Storage and Usage (டேட்டா ஸ்டோரேஜ் மற்றும் யூசேஜ்) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.  

வழிமுறை 03: இப்போது நீங்கள் Media Auto-download செக்ஷனை காண்பீர்கள், அதன் கீழ் 3 விருப்பங்களையும் காண்பீர்கள். அதில் எந்தவொரு விருப்பத்தை தேர்வு செய்தாலும் அது புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆகியவற்றைக் குறிப்பிடும் விருப்பங்களைக் காட்சிப்படுத்தும்.  

வழிமுறை 04: அதில் When using mobile data என்கிற விருப்பத்தை தேர்வு செய்து எதெல்லாம் டவுன்லோட் ஆக வேண்டும், எதெல்லாம் ஆக கூடாது என்பதை தேர்வு செய்து ஓகே என்பதை கிளிக் செய்யவும்.  

வழிமுறை 05: இதைச் செய்வதன் மூலம், வாட்ஸ்அப் உங்கள் போன் ஸ்டோரேஜில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தானாக சேமிப்பதை நீங்கள் நிறுத்தலாம் மற்றும் குறிப்பாக நீங்கள் விரும்பும் மீடியாக்களை மட்டுமே பதிவிறக்கலாம்.