Breaking News

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் பலி! -விபரம் வெளியீடு!

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. 

இன்றைய தினம் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதி செய்தார்.  

கீழ் கண்ட விபரங்கள் குறிப்பிடப்படும் வகையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒன்பது பேர் (09) இன்று (21) உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிசெய்தார். அத்தோடு இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மொத்த மரண எண்ணிக்கை 83 ஆகும்.  

01. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையுடன் நிமோனியா நிலை மற்றும் தொற்று அதிர்ச்சிக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

02. வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

03. தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா நிலைமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

04. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆவார். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

05. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு, அதியுயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட மாரடைப்பாகும்.  

06. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான பெண். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 உடன் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

07. வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்தோடு அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியாவுடன் பக்டீரியா தொற்று நிலைமை ஏற்பட்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

08. வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட கடுமையான நிமோனியா நோய் நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

09. 76 வயதான பெண் ஆவார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஐனுர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா மற்றும் இரத்தம் நஞ்சானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.