சிம்பு - கெளதம் கார்த்திக் படத்திற்காக ஒன்றிணையும் 10 இயக்குனர்கள்! - THAMILKINGDOM சிம்பு - கெளதம் கார்த்திக் படத்திற்காக ஒன்றிணையும் 10 இயக்குனர்கள்! - THAMILKINGDOM

 • Latest News

  சிம்பு - கெளதம் கார்த்திக் படத்திற்காக ஒன்றிணையும் 10 இயக்குனர்கள்!


  'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிம்பு - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று  (24.12.2020) இப்படத்தின் பெயரை பத்து பிரபல இயக்குனர்கள் அறிவிப்பார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

  சில வருடங்களுக்கு முன்பு கன்னட ரீமேக் படமான 'முப்டி', சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் தொடங்கப்பட்டது. இப்படத்தை நார்த்தன் இயக்கினார். பிறகு, தயாரிப்பு நிறுவனத்துக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இப்படம் நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதனால், இப்படத்தைப் பற்றி எந்த அறிவிப்புகளும் இல்லாமல் இருந்தது.    

  இந்நிலையில், சிம்பு தனது உடல் எடையைக் குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பிறகு, சுசீந்திரனின் 'ஈஸ்வரன்' படத்தை முடித்துவிட்டு, வெங்கட் பிரபுவின் 'மாநாடு' படத்தில் நடித்துவரும் சிம்பு, அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, சிம்பு-கெளதம் கார்த்திக்கின் படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.     

  இந்நிலையில், இப்படத்தின் பெயரை, நாளை காலை வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, வெங்கட்பிரபு, ராஜேஷ், விக்னேஷ் சிவன், ஆனந்த் ஷங்கர், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா,ரஞ்சித், சாம் ஆண்டன், சந்தோஷ் ஜெயகுமார், அஷ்வத் மாரிமுத்து ஆகிய 10 இயக்குனர்கள் வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.    

  முதலில் இப்படத்தை இயக்கிய, இயக்குனர் நார்த்தன் மாற்றப்பட்டு, 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சிம்பு - கெளதம் கார்த்திக் படத்திற்காக ஒன்றிணையும் 10 இயக்குனர்கள்! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top