ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு.. - THAMILKINGDOM ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு.. - THAMILKINGDOM
 • Latest News

  ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு..   ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம். அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள். ‘இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்’ என்றாளாம்.

  வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு ‘வெற்றிலை’ என்று பெயர் வந்தது. ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால் தான்.

  எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக் கூடிய மரியாதை நிமித்தமான பழம். மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள்களுக்கு மிகவும் பிடித்தமான பழம். நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம்பழ மாலை சார்த்தி வழிபடுவோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளின் சிறப்பு.. Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top