Breaking News

கிறிஸ்மஸ் காலத்தில் முடக்கப்படுமா நாடு?

 


நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டால் அதிர்ச்சியடைய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறைந்து வருகிறதென்றும் சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மீண்டுமொரு முடக்கம் தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டால் அதிர்ச்சியடைய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற சிலர் இரகசிய கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கிறனர் என்றும் அவர் சாடியுள்ளார்.

தற்போதைய, தீவிரமான சூழ்நிலையிலிருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் இது போன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பங்கேற்பதையும் தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், உரிய தரப்பினரிடம் அனுமதி பெறாது முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் இரத்து செய்யப்படலாம் எனவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், அனுமதி பெறாமல் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.