இலங்கையின் கொரோனா மரண எண்ணிக்கையில் அதிகரிப்பு! - THAMILKINGDOM இலங்கையின் கொரோனா மரண எண்ணிக்கையில் அதிகரிப்பு! - THAMILKINGDOM
 • Latest News

  இலங்கையின் கொரோனா மரண எண்ணிக்கையில் அதிகரிப்பு!  இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

  இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

  இவர்கள் அனைவரும் நேற்றைய தினம்(புதன்கிழமை) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது.

  இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 400ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இலங்கையின் கொரோனா மரண எண்ணிக்கையில் அதிகரிப்பு! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top