இராணுவ உயர் அதிகாரிகள் 133 பேர் இடமாற்றம்
இராணுவ உயர் அதிகாரிகள் 133 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இராணுவ நியதிகளுக்கு அமைய ஓராண்டுக்கு இரண்டு தடவைகள் இடமாற்றங்கள் செய்யப்படுவதாகவும் இந்த நியதியின் அடிப்படையில் இராணுவத்தினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகள் கடமையாற்றியவர்களில் 28 பிரிகேடியர்கள், 33 கேர்ணல்கள், 54 லெப்டினன் கேணல்கள், 18 மேஜர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த இடம்மார்ரங்கள் இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைய செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.








