Breaking News

இராணுவப் புரட்சிக்காக 7 படையணிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டன - அனுரகுமார

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று இரவு ராஜபக்ஷவினர் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக இராணுவ சதியில் ஈடுபட கஜபா படைப் பிரிவின் 7 படையணிகளை கொழும்புக்கு வரவழைத்திருந்தாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.இந்த விசேட படையணிகள் சிறப்பு இராணுவ ஜெனரல் ஒருவர் ஊடாக வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அதிகாரத்தை அமைதியாக ஒப்படைத்தார் என்பது ஊடக கண்காட்சி மாத்திரமே. ராஜபக்ஷவினர் மேற்கொண்ட திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தால், நாட்டில் இரத்த ஆறு ஓடி, நாட்டில் பிணங்கள் குவிந்து கிடக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்